கட்டுரைகள்

இந்தியா மீது இலங்கை ஜனாதிபதிக்கு எச்சரிக்கையுணர்வு மிக மிகத் தேவை….  ஏலையா க.முருகதாசன்

எச்சரிக்கை உணர்வு என்பது சாதாரண மனிதர்கள் தொடங்கி நாட்டின் தலைவர்கள், விஞ்ஞானிகள், நாட்டின் சகலதுறைக் கட்டுமானங்கனளை உருவாக்கும் அறிஞர்கள,பேராசிரியர்கள்; வரை மிக மிக முக்கியமானது.

இலங்கை ஜனாதிபதி அவர்கள் எந்த நாட்டுக்கு அரச விருந்தினராகப் போனாலும் அவரின் உணவு விடயத்திலும்,தங்குமிட விடுதிகள் தொடர்பான சுற்றுச் சூழல் பகுதிபற்றியும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

இவற்றைத் தனித்தனியாகப் பிரித்தப் பகுத்துப் பார்த்தால் மேலே சொன்னவற்றின் ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான பிரிவுகளும் அதனோடினைந்த கிளைப் பிரிவுகளும் உண்டு.

அரசநிர்வாகக் கட்டமைப்புகளின் மூலம் ,மூலக்கூறுகள் எனப் பகுப்பதும் அவற்றின் மீதே ஒரு தேசத்தின் கட்டுமான அடித்தளம் தாங்கி நிற்கின்றது.

President Anura Kumara meets Indian PM Narendra Modi in New Delhi

அன்றிருந்ததைவிட உலகநாடுகள் அதிலும் அனைத்துத் துறையிலும் நவீனம் சேர்ந்த வல்லமை பொருந்திய நாடுகள் தமக்கருகாமையிலுள்ள நாடுகளையும் தமது பொருளாதார வணிக நலன்களுக்காக வளர்முக நாடுகளையும் தமது ஆளுமையால்,தமது நாட்டின் வளர்ச்சிக்காக சுயநல மனப்பான்மையுடன் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன.

இலங்கையைப் பொறுத்தவரை பக்கத்து நாடான இந்தியா பன்னெடுங்காலமாக இலங்கைக்கு உதவி செய்து வருவது உண்மையெனினும் தாம் இலங்கை மக்களின் நலன் விரும்பிகள் எனக் காட்டிக் கொள்வது போலியானது.உதவிக்கு பின்னால் இந்தியாவிடம் சுயநலம் உண்டு.தனது ஆளுமைக்கு கட்டுப்பட்ட நாடாக இலங்கை காலத்துக்கும் இருக்க வேண்டும் என்று இந்தியா தனது வெளிநாட்டுக் கொள்கையூடாக வரையறுத்து வைத்திருக்கின்றது.

இலங்கையில் ஏற்பட்ட இன ரீதியான அரசியல் குழப்பங்கள், அரசியல் ஏற்ற தாழ்வுகள், இன்னும் மத மதரீதியான் அணுகுமுறைகள் வழியாக தமிழர்களுடன் சிங்கள மக்களை ஒட்டுறவு கொள்ளாமல் இருப்பதற்கு இந்தியாதான் காரணம் என்பதை சிங்களவர்களும் தமிழர்களும் அறிந்து கொண்டாலும் இந்தியாவின் போக்கை சாதுர்யமாக கையாள காலத்துக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

அத்தகைய காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளும் காலம் ஏற்பட்டுள்ளது.இலங்கையில் என்றுமில்லாதவாறு தமிழர்கள் இப்பொழுதைய ஜனாதிபதியை முழுமையாக நம்பத் தொடங்கிவிட்டனர்.ஜனாதிபதி இனவாதம் பாகுபாடு என எதுவுமே இலங்கையில் இருக்காது என்பதை வெளிப்படையாக தமிழ்,முஸ்லீம் மக்களை அரவணைத்து அதை உணர்த்தி வருகிறார்.

ஜனாதிபதியை சிங்கள தமிழ் மக்கள் தமது குடும்ப உறவாக அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டனர்.

இது இந்தியாவுக்கு பெரும் பிரச்சினையாகத் தோன்றிவிட்டது. சிங்களவர்களும் தமிழர்களும் காலத்துக்கும் முரண்பட வேண்டுமென்பதே இந்தியாவின் நோக்கம். சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லீம்களும் தமக்குள்ளிருக்கும் இன மத பேதங்களை மறந்து இலங்கையர் என்ற ஒற்றைச் சொல்லக்குள் ஐக்கியமாகத் தொடங்கவிட்டனர் என்பது இந்தியாவுககு சீரணிக்க முடியாததம் எரிச்சல் தரக்கூடியதாகவம் இருக்கின்றது.

சிங்களவர்களுக்கு அவர்களுக்கேற்றமாதிரியும் ,தமிர்களுக்கு தமிழர்களுக்கு ஏற்ற மாதரியும், முஸ்லீம்களுக்கு அவர்கள் எந்தவிடயமானலும் தமது மதத்தை முன்னிறுத்தியே சிந்திப்பதால் அதை அவர்களை சாரஆந்தும்,அதே வேளை புத்தமதந்தான் இலங்கைக்கான மதம் என இலங்கையின் அதி உயர் புத்தமதகுருமாருடன் தொடர்புகளைப்: பேணி அவர்களைத் தூண்டுவது என மிக நீண்ட மிகப்பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்து அதை நீடித்து தொடர்ந்தும் இலங்கையின் அனைத்து இன மத பொருளாதார சமூகப் பிணைப்பு போன்றவற்றுக்கூடாக இந்தியா இராஜதந்திர ஊடுருவலை தனது புலனாய்வுக்கூடாகச் செய்து வருவதை இப்பொழுது ஒட்டுமொத்த இலங்கையர்களுமே உணர்ந்து அறியத் தொடங்கிவிட்டனர்.

Sri Lanka, India forge defense, energy ties during Modi's visit | Arab News

இப்பொழுது இந்தியாவுக்கு பெரும் சவாலாகவும் தலையிடியாகவும் இருப்பது இன்றைய ஜனாதிபதியே.

இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியாவின் சூழ்ச்சி மிக நன்றாகவே தெரியும்.இன்றைய ஜனாதிபதி ஏழ்மையின் சுவடுகளை நன்றாகத் தெரிந்தவர்.பசியின் கொடுமையை நன்றாக அறிந்தவர்.அரசியலின் ஒவ்வொரு அணுவையும் அறிந்தவர்.தமிழர் சிங்களவர்களின் பிரச்சினையை கசடறக் கற்றவர் உணர்ந்தவர்.அவர் ஒரு பட்டதாரியுமாவார்.

அதனால்தான் அதனை எல்லாம் எவ்வாறு அணுக வேண்டும் என்ற அரசியல் ஞானமும் அந்தந்த அமைச்சுகளின் அமைச்சர்கள் ஜனாதிபதிக்குச் சமனாக தமது அமைச்சுகளை எவரின் தலையீடும் இல்லாமல் இலங்யைரசு நிர்வகித்து வருகின்றது.

ஒரு புறத்தில் இலங்கைக்கு உதவி செய்வதும், அதே வேளை தாம் உதவி செய்பவர்கள் மட்டுமே எனக் காட்டிக் கொண்டு இலங்கை மக்களின் ஒற்றுமையையும்,அரச நிர்வாகத்தையம் குழப்ப நிலைக்குக் கொண்டு வருவதில் இந்தியா தனது புலனாய்வுத்துறைக்கூடாகச் சதி செய்து வருவதும் உண்மையே.

உலக நாடுகளின் ஆட்சிக் கட்டமைப்பில் பொதுப்பாதுகாப்பும் உளவறிதல் என்ற அமைச்சுக் கட்டமைப்புகளில்,அந்தந்த நாடுகளின் பல்வேறுபட்ட அத்தியாவசியமான அமைச்சுகளைவிட உளவுத்துறை அமைச்சு தமக்கென வெளிப்படையாக அமைச்சின் பெயரை பகிரங்கப்படுத்தமாட்டார்கள்.

ஆனால் உளவுநிறுவன நுண்ணறிவாளர்கள் வெளிநாட்டுத் தலைவர்களுடன் ஏற்படுத்தப்படும் அரசுகளின் சந்திப்புகளிலும் கூட்டங்களிலும் அந்நாட்டு அதிபர்களின் செயலாளர்கள் ,பொறுப்புக்கூறும் அதிகாரிகள் என்ற பெயர்ப் போர்வையுடன் கலந்து கொள்வார்கள்.

பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் நாட்டுத்தலைவர்களின் அணுகுமுறை, எதைப்பற்றிப் பேசுகிறார்களோ அதுசார்ந்த அவர்களின் ஆளுமை அறிவுத்திறமை போன்றவற்றை அதிகாரிகள் என்ற போர்வையில் கலந்து கொண்டிருக்கும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் எடை போட்டு பின்னர் தமது நாடு அவர்களை எவ்வாறு கையாள வேண்டுமென அரசு பீடத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதுடன் அரசின் மத்திய குழுவுடன் கலந்துரையாடுவார்கள்.

இலங்கையை இந்தியா பல்வேறு விதமாகக் கையாளுவதை கடந்த காலங்களில் அவதானித்திருப்போம்..

இன்றைய ஜனாதிபதிக்கு தமிழ்மக்கள் கொடுத்துவரும் ஆதரவை இந்தியா எதிர்பார்க்கவே இல்லை. ஒரு அரச அதிபரை அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கு பல்வேறு இராஜதந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

India's Foreign Minister meets President - LankaTruth English

சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களிடையே ஒருவரை ஒருவர் நேசிக்காத அக்கறை கொள்ளாத மன இடைவெளிகளைத் தோற்றுவித்து அடித்தார் அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல இனங்களுக்கிடையில் கசப்புணர்வுகளை வளர்த்து,ஆங்காங்கே தற்காலிகமாக சிறுசிறு கலவரங்களை ஏற்படுத்தி,கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்பது போல,சம்பவச் செய்திகளுக்குள் அவரவர் மனம்போனபடி வதந்திகளையும் கலந்து பரவவிட அது இனமுரண்பாடுகளை தோற்றுவித்து சிங்களவர்களை தமிழர்களுக்கு இந்த அரசு விற்றுக் கொண்டிருக்கிறது என்று விழுந்த பாட்டுக்கு குறி சுடுகிற மாதிரி அரச எதிர்ப்பரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்ய அதை வைத்தே மீண்டும் இலங்கை இனக்குழப்பங்களுக்குள் வரவேண்டும் என்ற திட்டம் இன்னும் நீறுபூத்த நெருப்பாகவே இந்தியாவிடம் இருக்கிறது.

இந்த இந்தியாவின் சதிமிகு வஞ்சக நோக்கம் தேனுக்குள் விசம் கலந்தது போல எந்நேரத்திலும் தக்க பொறுத்த சந்தர்ப்பத்தில் மெல்லக் கொல்லும் விசமாக வெளிப்படும்.இப்பொழுதும் அதன் படிமுறைச் செயல்பாடுகள் தொடர்வதாகவே கருத முடியும்.

இலங்கையில் எற்பட்ட கலவரங்கள்,அதனால் ஏற்பட்ட சிங்கள தமிழ் உயிரழிவுகளும்,அதனால் எற்பட்ட சிங்கள தமிழ் வெறுப்புணர்வகளும்,அதனால் ஏற்பட்ட தனித்து வாழ்வோம் என்ற வடக்குக் கிழக்குத் தமிழர்களின் தனிநாட்டுக் கொள்கையும்,அதனால் ஏற்பட்ட ஆயுதப் போராட்டமும்,அதனால் ஏற்பட்ட இருபக்க உயிரழிவுகளும் பொருளாதார அழிவுகளும், விஸ்வரூபமெடுத்த அதியாவசிப் பொருட்களின் விலைவாசி ஏற்றங்களும்,அதனால் ஏன்? எதற்கு இப்படி ஆனது? என்று என்று சிந்தித்த சராசரி இலங்கையர்கள் தமிழர்களின் ஆயுதப் போர்தான் காரணம் எனவும்,போர்த் தளபாடங்களுக்கு அதிகளவு நிதி செலவழிக்க வேண்டியதால் அதனைச் சரிகட்ட மக்களின் அன்றாட தேவைக்கான பொருட்களின் விலைகளை ஏற்றியதும்;,மற்றைய நாடுகளில் கடன் வாங்கியும் இலங்கையை நிர்வாகித்ததால் சாண் ஏற முழம் சறுக்கிய மாதிரி இலங்கை மக்களின் வாழ்க்கை தளம்பல் நிலையை அடைந்தது.

இலங்கை மக்கள் அனைவரும் மொழி,மதப் பிரிவுகளுக்குள் கணிக்கப்படுவது பாரதூரமான வீழ்ச்சியைக் கொண்டுவரும் என்பதன் யதார்த்தத்தை நன்குணர்ந்த இன்றைய சமகால அரசு இனவாதம்,பாகுபாடு அற்ற,அனைவரும் இலங்கையர் என்ற நேர்மையான அரசியல் வழியாக இலங்கையை நிர்வகிக்கின்றது.

இலங்கையில் காணப்பட்ட அரசியல் சித்தாந்த கோட்பாட்டு அலகாய்ந்த ஆட்சிமுறைகளை சீர்குலைப்பதிலேதான் இந்தியா மிக மிக நீண்டபல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றது என்பததை புரிந்து கொள்ள,அடுக்கடுக்காக தர்க்க முறையில் கேள்விகளைகளைக் கேட்டு அதை நுண்ணறிவுடன் விளங்கிக் கொள்ள எந்தவொரு இலங்கைப் பொதுமகனும் அதற்கு அரசியல்,பொருளாதார கலாநிதி கல்விசார் பட்டத்தைப் பெற வேண்டிய அவசியமே இல்லை.சிந்தித்தால் அதனைப் புரிந்து கொள்ள முடியம்.

அதில் ஒன்று அதிபரை நோய்வாய்படுத்துவது.ஒரு நாட்டில் விருந்தினராக தங்கியிருக்கும் நாட்டின் அதிபருக்கு மெதுவாகக் கொல்லும் விசமருந்துகள் உணவுடன் கொடுக்கப்படுவது சதிக் கோட்பாட்டில் அதுவும் ஒரு அணுகுமுறை. உடலும் சரி,உணவுகளம் சரி வேதியல் பதார்த்தங்களால் ஆக்கப்பட்டவையே.

வேதியல் பதார்த்தங்கள் உடலில் இருக்க வேண்டிய அளவை மீறி இருந்தாலோ அல்லது குறைந்து இருந்தாலோ உடலில் நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

President Anura Kumara Dissanayake Accorded Ceremonial Welcome at  Rashtrapati Bhavan - President's Office | President's Office

இந்த அணுகுமுறையைத்தான் உளவு அமைப்புகள் கையாள்வதும் உண்டு. குறிப்பாக எந்த நோயினாலும் பாதிக்கப்படாத சுக தேகிக்கு காய்ச்சலுக்குப் பயன்படுத்தும் பனடோல் குளிகையில் மிகச் சிறியளவில் உணவுடனோ தேநீருடனோ, தண்ணீருடனோ, குளிர்பானத்துடனோ ஒவ்வொரு நாளும் கொடுத்தால் அவர் நோயாளியாவார். அந்த மரந்தின் தாக்கம் உடலிலுள்ள முக்கிய உறுப்புளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

அதனால் நோய்வாய்ப்படும் அதிபருக்கு அடுத்து வரும் அதிபர் யார் என்பதையம்,தனது சொல்லுக்குச் செவிசாயக்கும் அதிபரை இந்தியாவின் அறிவுறுத்தலுக்கமைய தெரிவு செய்ய முற்படும்.

இலங்கை ஜனாதிபதி,இந்தியாவிற்கு அரச ரீதியாகவும் விஜயம் செய்யும் போதெல்லாம்,உணவு விடயத்திலும்,சுற்றுச்சூழல் விடயத்திலும் அவர் மிக மிக அவதானமாகவே இருக்க வேண்டும்.

இந்தியா இலங்கைக்கு நேரடியாகத் தன்னை இனங்காட்டிக் கெடுதல் செய்யாது,தனது புலனாய்வுத்துறை வழிவந்த முகவர்கள் ஊடாகவே வஞ்சக வலைiயு விரிக்கும்.

இந்தியாவுடன் இலங்கை ஓடும் புளியம்பழமும் போலவும்,தாமரை இலைத் தண்ணீர் போலவுமே இருக்க வேண்டும்.

இலங்கைக்கான இந்தியாவின் சிரிப்பு வஞ்சகமற்ற சிரிப்பு அல்ல.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *