பலதும் பத்தும்

இணையத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்கு சிறந்த இலவச Parental Control Apps

இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுவதால், பெற்றோர்கள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகப் பெரிய சவாலாக உள்ளது.

சைபர் நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, பல்வேறு parental control apps மூலம் குழந்தைகளின் இணையப் பயன்பாட்டை கண்காணிக்க முடியும்.

இவை குழந்தைகள் எந்த இணையதளங்களை பார்கிறார்கள், சமூக வலைத்தளங்களில் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள், எவ்வளவு நேரம் ஸ்கிரீன் பயன்படுத்துகிறார்கள் என்பதனை கண்காணித்து, தேவையான இடங்களில் எச்சரிக்கை அனுப்புகின்றன.

முக்கியமாக, சில apps இலவசமாகவே அடிப்படை வசதிகளை வழங்குகின்றன.

Qustodio: மிகச் சிறந்த parental control app என மதிப்பிடப்படுகிறது. இணையத் தளங்களைத் தடுக்க, screen time-ஐ கட்டுப்படுத்த, GPS மூலம் குழந்தையின் இருப்பிடத்தை அறிய உதவுகிறது.

Norton Family: பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற app. இணையத் தேடல் கண்காணிப்பு, web filtering, geo-fencing போன்ற வசதிகள் உள்ளது.

Bark: சமூக வலைத்தளங்கள் மற்றும் பல apps-ஐ கண்காணிக்க சிறந்தது. cyberbullying, online predators போன்ற அபாயங்களை கண்டறிந்து பெற்றோருக்கு எச்சரிக்கை அனுப்புகிறது.

இந்த apps-கள் மூலம் பெற்றோர்கள் குழந்தைகளின் இணையப் பயன்பாட்டை கட்டுப்படுத்தி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

இருப்பினும், இலவச apps-களில் சில வரம்புகள் உள்ளன. அதிக வசதிகள் தேவைப்பட்டால் paid version-ஐ பயன்படுத்த வேண்டியிருக்கும்.

இணையத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க, பெற்றோர்கள் apps-ஐ பயன்படுத்துவதோடு, அவர்களுடன் உரையாடி, காரணங்களை விளக்கி, நம்பிக்கையுடன் வழிநடத்துவது மிக முக்கியம்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *