உலகம்

வடகிழக்கு சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றம்

அமெரிக்கா, வடகிழக்கு சிரியாவில் உள்ள முக்கிய இராணுவ தளத்திலிருந்து தனது படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இந்த நடவடிக்கை பல வாரங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக, படைகள் மற்றும் கனரக உபகரணங்கள் வடக்கு ஈராக் பகுதிகளுக்கு மாற்றப்படுகின்றன.

அமெரிக்க படைகள் தங்கியிருந்த கச்ரக் (Qasrak) தளத்திலிருந்து கனரக இயந்திரங்கள், படையினர் மற்றும் கவச வாகனங்களை ஏற்றிய லாரிகள் வடமேற்கு ஹசகா நகரில் காணப்பட்டன.

அவை வடக்கு ஈராகின் தன்னாட்சி குர்திஷ் பகுதிகளை நோக்கி நகர்ந்தன.

கச்ரக் தளம் சிரியாவில் அமெரிக்காவின் மிகப்பெரிய தளமாகும். உயர் தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்ட பல்வேறு உணர்வுபூர்வ (sensitive) உபகரணங்கள் ஈராக் நோக்கி மாற்றப்படுகின்றன.

அவற்றை மாற்ற பல வாரங்கள் ஆகலாம் என உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், முழுமையான வெளியேற்றத்தை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பரிசீலித்து வந்ததாக கூறப்படுகிறது.

முதல் கட்ட வெளியேற்றத்தில், ஹசகா தெற்கில் உள்ள அல்-ஷடாதி தளமும், டெயிர் அல்-சோர் மாகாணத்தில் உள்ள அல்-ஒமர் எண்ணெய் களமும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் இந்த தளங்களிலிருந்து பலப்படுத்தப்பட்ட படைகள் கச்ரக் தளத்திற்கு மாற்றப்பட்டிருந்தன.

பிப்ரவரி 15ஆம் திகதி அல்-ஷடாதி தளம் முழுமையாக சிரிய இராணுவ கட்டுப்பாட்டுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *