தங்களுக்குள் தாங்களே சுடுபட்டு அழியும் பாதாளக் குழுக்கள்; வாசுதேவ கூறுகிறார்

பாதாள குழுக்களை இல்லாமல் செய்ய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளால் செய்ய வழியின்றி குற்றக்கும்பல்களை சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடுகளை நடத்தி தமது செயற்பாடுகளை தாமாகவே முடிவுக்கு கொண்டுவர முந்திக்கொள்கின்றனர் என்று முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தள்ளார்.
கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாதாள குழுக்களின் துப்பாக்கிதாரிகள் அவர்களின் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர முந்திக்கொள்கின்றனர். அரசாங்கம் பாதாள குழுக்களை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகவும், மறைந்துள்ள துப்பாக்கிதாரிகளை பிடிக்க சுற்றிவளைப்புகளை நடத்துகின்றது என்றும், திட்டமிட்ட குற்றக்கும்பல்களை கண்டுபிடிக்கின்றது. வெளிநாட்டுக்கு சென்றும் தலைமறைவாக இருக்க முடியாது. இதனால் செய்ய வழியின்றி துப்பாக்கி சூடுகளை நடத்திக்கொண்டு போகின்றனர்.
இதேவேளை நிலக்கரி இறக்குமதி விடயத்தில் அரசாங்கத்தின் மீது முழுவதுமாக விமர்சனங்களை முன்வைப்பது தவறாகும். ஏதோவொரு நிறுவனத்தில் எவரேனும் அதிகாரி மற்றும் அமைச்சர் ஒருவரால் ஏற்பட்ட தவறுக்காக அரசாங்கத்தின் மீது பொதுவாக விமர்சனங்களை முன்வைப்பது தவறாகும். பொறுப்பு கூற வேண்டிய அமைச்சர் இருக்கின்றார். அவர் தனது பொறுப்பை சரியாக செய்துள்ளரா என்பதனை அரசாங்கம் அமைச்சரவையில் ஆராய வேண்டும். இல்லையென்றால் அந்த பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும். எவராவது ஒருவர் தவறு செய்திருக்கலாம். அவரை பற்றி கதைக்கலாம். இதனை விடுத்து அரசாங்கத்தை விமர்சிப்பது பொருத்தமானது அல்ல என்றார்.
![]()