இலங்கை

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டம்

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இப் போராட்டம் நடைபெற்றது.

அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ‘ஹை யஸ்’ ரக வாகனத்தை தாம் மறித்தபோது, அதனை நிறுத்தாது சென்றமையால் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதில் வாகனத்தைச் செலுத்திய சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

எனினும், நிறுத்தாமல் சென்ற வாகனத்தைப் பொலிஸார் வழிமறித்த பின்னரே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இது பொலிஸாரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையிலேயே, உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பதும், சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட வழக்கு விசாரணை நாளை (24) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *