பலதும் பத்தும்

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க… அல்சருக்கான அறிகுறிகள்

வயிறு அல்சர் பிரச்சனைக்கு அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மக்களின் உணவுப்பழக்கம் தற்போது மிகவும் மோசமாக இருப்பதால் பல நோய்களின் தாக்கம் ஏற்படுகின்றது. பெரும்பாலும் நீரிழிவு, அல்சர், தைராய்டு போன்ற பிரச்சனை அதிகமாக இருக்கின்றது.

ஆனால் பெரும்பாலான நபர்களுக்கு அல்சர் பிரச்சனை எதனால் ஏற்படுகின்றது என்பது தெரியாமல் இருக்கின்றது.

அல்சர் பிரச்சனை வயிற்றின் உட்புறப் புறணியில் உருவாகும் நோயாகும். வாயு, அமிலத்தன்மை என பலரும் அல்சர் நோய்க்கான அறிகுறிகளை புறக்கணிக்கின்றனர். அல்சர் நோய்க்கான அறிகுறிகள் தெரிந்து கொள்வோம்.

வயிற்றின் உட்புறப் புறணி பலவீனமடையும் போது, அமிலம் வயிற்றில் உருவாகி, உட்புற புறணியை சேதப்படுத்துகின்றது. இவை காயத்தை ஏற்படுத்துவதையே அல்சர் என்று கூறப்படுகின்றது.

நீண்ட கால மருந்து பயன்படுத்துவது, காரமான உணவுகள், வறுத்த உணவுகள், மது மற்றும் புகைபிடித்தல், மன அழுத்தம் போன்றவை காரணமாக அமைகின்றது.

வயிற்றில் தொடர்ந்து எரிச்சல், வலி ஏற்பட்டால் அறிகுறியை அலட்சியமாக எடுக்கக்கூடாது. சாப்பிட்டு பின்போ அல்லது வெறும் வயிற்றிலோ இந்த மோசமாக இருக்கும், இரவில் இந்த வலி மிகவும் மோசமாகும்.

வாயு, புளிப்பு ஏப்பம் அல்லது அஜீரணம் இவை தொடர்ந்து ஏற்பட்டால் அல்சரின் ஆரம்ப அறிகுறியாக இருக்குமாம்.

வயிற்றினை சுற்றியுள்ள பகுதியில் வீக்கம் மற்றும் எரிச்சல் ஏற்பட்டு, இவை குமட்டல், வாந்தி இவற்றிற்கு வழிவகுக்கின்றது. கடுமையான சந்தர்ப்பங்களில் வாந்தியில் ரத்தம் வரவும் வாய்ப்புள்ளது.

பசியின் அளவு குறைந்தாலும், சாப்பாட்டில் விருப்பம் இல்லாமல் இருந்தல், குறைவாக சாப்பிட்டதும் வயிறு நிரம்பிய உணர்வு இவைகள் அல்சர் பிரச்சனைக்கு அறிகுறியாகும்.

மலம் கருப்பு நிறத்தில் காணப்பட்டால் அவை உட்புற ரத்தப்போக்கின் அறிகுறியாக இருக்கும். சில தருணங்களில் அல்சரின் தன்மை அதிகமாகி ஆபத்தையும் ஏற்படுத்தும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *