பலதும் பத்தும்

கர்நாடகாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் செல்போன் பயன்படுத்த தடை?

மொபைல் போனுக்கு சிறுவர்கள் அடிமையாய் இருப்பதை தடுக்க 16 வயதுக்கு உட்டபட்டவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பாக அரசு பரீசிலித்து வருவதாக கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சிறார்கள் மொபைல் போனுக்கு அடிமையாகி இருப்பது கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுதொடர்பான ஆக்கப்பூர்வமாக அறிவுரைகள் வழங்குமாறு பல்கலைகழக துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

இந்தியாவிலும் இதுகுறித்து ஆலோசித்து வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *