பலதும் பத்தும்

மனிதர்களை கொட்டிய பின்னர் உண்மையில் தேனீ இறக்குமா?

தேனீக்கள் மனிதனை கொட்டிய பின்னர் இறக்கின்றன என்று கூறப்படுகின்றது. இது உண்மையா இதற்கு காரணம் என்வென்பதை பதிவில் பார்க்கலாம்.

தேனீக்கள் மனிதர்களைக் கொட்டிய பிறகு உயிரிழந்துவிடும் என்ற நம்பிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் அது முழுமையாக உண்மையா? என்ற வினா பலருக்கும் உண்டு.

இதை பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். சுமார் 20,000க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த தேனீக்களை கொண்டு ஆண்வு நடத்தப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் எல்லா தேனீக்களும் கொட்டிய பின்னர் உயிரிழக்காது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சில வகை தேனீக்கள் உயிர்வாழுமாம் இதை பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

தேனீக்கள் மனிதர்களையும் பூச்சிகளையும் கொட்டுகின்றன. பூச்சிகள் மெல்லிய தோலைக் கொண்டிருக்கின்றன.

எனவே அது தேனீக்கள் தாக்கும் போது கொடுக்கிற்கு எந்த வித சேதத்தையும் ஏற்படுத்துவது இல்லை, ஆனால் அவை மனிதனைக் கொட்டும் போது அவற்றின் கொடுக்கு நம் தோலில் ஊடுருவி ஒட்டிக்கொள்வதால் அதிகமான வலியை கொடுக்கிறது.

இதனால் அதன் உடலில் இருந்து வயிற்றில் தொடங்கி வால் முனை வரை குத்துகிறது. இதன் காரணமாக தான் தேனீக்கள் கொட்டிய பின்னர் பறந்து சென்று இறக்கின்றன.

ஆனால் எல்லா வகை தேனீக்களும் இறப்பதில்லை. மனித உடலில் எந்த தேனீக்கள் கொடுக்குகளை பதிவு செய்யுமோ அவை மட்டுமே உயிரிழக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *