உலகம்

சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய ட்ரோன் படை!

நாடு முழுவதும் அதிகரித்து வரும் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டும் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியாக 33 பேர் கொண்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் படை பணியமர்த்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் குற்றங்களைச் செய்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்த இந்த புதிய வான்வழி கண்காணிப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய சட்டவிரோத கழிவு இடங்களின் விரிவான வரைபடங்களை உருவாக்க, 33 பயிற்சி பெற்ற விமானிகள் மற்றும் லேசர் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ட்ரோன்களைக் கொண்ட புதிய ட்ரோன் படைகள் செயல்படுத்தப்படும்.

இது தவிர கழிவுகளை ஏற்றிச் செல்லும் கழிவு லொறிகள் உரிய அனுமதிகளைப் பெற்றுள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும் இந்த புதிய ட்ரோன் படை பயன்படுத்தப்படும்.

இது சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டை மிகவும் திறம்பட கண்டறிய வழி வகுக்கும்.

இங்கிலாந்தில் சட்டவிரோத கழிவுகளை கொட்டுவது தொடர்பான விசாரணையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுச் சூழல் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி வந்துள்ளது.

சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதால் இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு 1 பில்லியன் பவுண்ட்ஸ் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *