வேற்றுகிரகவாசிகள் குறித்த ரகசிய தகவல்களை வெளியிட டிரம்ப் உத்தரவு

வேற்றுகிரகவாசிகள் தொடர்பான அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நெவாடா பகுதியில் ”ஏரியா-51”ல் வேற்றுகிரகவாசியை வைத்து ரகசியமாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகும்.
ஆனால் இது உண்மையில்லை என கூறிய முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மை தான் என தெரிவித்தார்.
மேலும் நான் இதுவரை பார்த்ததில்லை என கூறினார், ஒபாமாவின் இந்த பேட்டி வைரலான நிலையில் ஜனாதிபதி டிரம்ப் புதிய உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
அதாவது, வேற்றுகிரகவாசிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் விமானங்கள் பற்றிய கோப்புகளை ரகசிய பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, மக்களிடையே ஏற்பட்டுள்ள அதீத ஆர்வத்தை தொடர்ந்து வேற்றுகிரகவாசிகள், வேற்றுகிரக வாழ்க்கை, அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள் மற்றும் அடையாளம் காணப்படாத பறக்கும் விமானங்கள் தொடர்பான அரசின் ரகசிய கோப்புகளை அடையாளம் கண்டு, பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
![]()