கவிதைகள்

மண்ணிலே உதித்த மாதவ மாமுனி!… கவிதை… ஜெயராமசர்மா

ஆணவ மறியா அன்பின் உருவம்
அல்லல் களையும் அருமை வைத்தியர்
ஆன்மீக உலகின் பேரொளி அவரே
அகத்தைத் திருத்தும் பெரியவா அடைக்கலம்

கதைகள் ஊடாய் கருத்துகள் பகர்வார்
கருத்தில் இருப்பதை கணத்தில் அறிவார்
சினத்தை அடக்கிய சிறப்புடை யோகியே
அவரைப் பணிவார் அனைத்தும் பெறுவார்

காஞ்சியைப் புனித மாக்கிய மாமுனி
கண்களில் கருணை தேக்கிய பேரொளி
மண்ணிலே உதித்த மாதவ மாமுனி
மலரடி தொழுவார் வளமுடன் வாழுவார்

பெரியவா பெயரே பெரும் பெயராகும்
வருவினை தடுக்கும் மாபெரும் மருந்தே
அருளினை வழங்கும் ஆனந்த ஊற்றே
அவரது திருவடி ஆறுதல் தருமே !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *