பலதும் பத்தும்

துபாயில் இலங்கையருக்கு அடித்த பெரும் ஜாக்பொட்

துபாயில் வசித்து வரும் இலங்கையர் ஒருவர், 12 லட்சம் ரூபாய்க்கு தங்கம் வாங்கியதற்காக வழங்கப்பட்ட கூப்பனில், 6.28 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘பென்ஸ்’ காரை பரிசாக வென்றுள்ளார்.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, துபாயில் பணிபுரிந்து வரும் இலங்கையைச் சேர்ந்த சுமித் என்பவர் குறித்த காரினை வென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமித், பிரபல நகைக்கடை ஒன்றில், இலங்கை மதிப்பில் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டி ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளார். இதற்காக அவருக்கு பரிசு கூப்பன் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

துபாய் ஷாப்பிங் திருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பரிசு குலுக்கலில், அவருக்கு, , இலங்கை மதிப்பில் 6.28 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நிற ‘மெர்சிடிஸ் பென்ஸ்’ கார் பரிசாக விழுந்துள்ளது.

அவர் வாங்கிய தங்கத்தின் விலையை விட, அவருக்கு பரிசாக கிடைத்த பென்ஸ் காரின் மதிப்பு 50 மடங்கு அதிகம்.

இது குறித்து சுமித் கூறுகையில், ”நான் என் சேமிப்பிற்காகவே தங்கம் வாங்கினேன். ஆனால், அது இவ்வளவு பெரிய பரிசை தரும் என நான் எதிர்பார்க்கவில்லை,” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், பரிசாக கிடைத்த காரை விற்க போவதில்லை எனவும், தானே வைத்து ஓட்டப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *