பலதும் பத்தும்

கோடிக்கணக்கில் விலை போகும் மண்ணுளிப்பாம்பு

பல கோடிக்கணக்கில் விலை போகும் மண்ணுளி பாம்பு பற்றி பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பாம்பு என்றால் யாருக்கு தான் பயம் இல்லை. பாம்புகள் கடிக்க கூடிய உயிரினம். அது தங்களுக்கு ஆபத்து வரும் கட்டத்தில் அந்த ஆபத்தில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தாக்க முயற்ச்சிக்கும்.

இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் வாழ்கின்றன. இதில் பல விஷ பாம்புகள் இருக்கின்றன.

அப்படி தான் பாம்பு இனங்களிலேயே மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, அதேசமயம் மூடநம்பிக்கைகளால் அதிகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் உயிரினம் ‘சிவப்பு மண்ணுளிப் பாம்பு’ (Red Sand Boa) ஆகும்.

இது பார்க்க வித்தியாசமாக இருப்பதால் இதற்கு பலரும் வதந்திகளை பரப்பி கதைகட்டி வைத்துள்ளனர். இந்த கதைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த ‘ஸ்னேக் சகா’.

இந்த மண்ணுளி பாம்பிற்கு இருதலை மணியன், மண் மலைப்பாம்பு, சிறிய மலைப்பாம்பு எனப் பல பெயர்கள் உண்டு. இவை இளம்பருவத்தில் உடல் முழுவதும் சிவப்பு நிறத்துடனும், ஆங்காங்கே கருப்பு கோடுகளுடனும் இருக்கும்.

இவை வளர வளர உடலில் உள்ள கோடுகள் மறைந்து முற்றிலும் வெளிறிய சிவப்பு நிறத்தைப் பெறும். இந்த பாம்பை பற்றி பலரும் வதந்திகளை பரப்பி வைத்துள்ளனர்.

மண்ணுளி பாம்புகள் விஷமே இல்லாத ஒரு பிராணி. இந்த பாம்புகள் வயல்வெளிகளில் உள்ள எலிகள் மற்றும் தவளைகளை உணவாக சாப்பிடும். இதானால் இது விவசாயிகளின் நண்பன் எனப்படுகின்றது.

இந்த பாம்பிற்கு இருதலை மணியன் எனபதால் இதற்கு இருதலையும் எள்ளது என மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் ஆனால் இல்லை.

இப்பாம்பிற்கு ஒரு தலை மட்டுமே உள்ளது.இந்த பாம்புகள் மருத்துவக் குணமிக்கவை என்றும், சர்வதேச சந்தையில் கோடிக்கணக்கில் விலை போகும் என்றும் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை.

இத்தகைய வதந்திகளை நம்பிப் பாம்புகளைப் பிடித்து சட்டப் சிக்கல்களில் சிக்க வேண்டாம் என அவா எச்சரித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *