பலதும் பத்தும்

பெண்ணுக்கு தவறாக சிகை அலங்காரம் செய்த சலூன்!

இந்தியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள ஐ.டி.சி. மவுரியா எனும் 5 நட்சத்திர ஓட்டலில் செயல்படும் சலூனுக்கு மாடலிங் பெண் ஆஷ்னா ராய் என்பவர் சென்றுள்ளார்.

அங்கிருந்த சிகையலங்கார நிபுணரிடம் முடியை 4 அங்குலம் குறைக்கும்படி கூறி உள்ளார். ஆனால் சிகையலங்கார நிபுணர், கவனக்குறைவால் முழு நீள முடியையும் வெட்டி விட்டார்.

முன்னணி நிறுவனங்களின் மாடலாக விரும்பிய அவருக்கு இது, மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அவர், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஆணையம், ஐ.டி.சி. மவுரியா ஓட்டல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக 2 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஓட்டல் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஓட்டல் நிர்வாகம் 25 லட்சம் ரூபா இழப்பீடாக வழங்கினால் போதும்’ என உத்தரவிட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *