பலதும் பத்தும்

15 சொகுசு விமானங்களில் கொழும்பு வந்த வி.ஐ.பி-க்கள்

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்வையிடுவதற்காக, 15 தனியார் ஜெட் விமானங்களில் உலகெங்கிலும் இருந்து ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கடந்த 14ஆம் திகதி முதல் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இந்த விமானங்கள் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானங்களில் பாகிஸ்தான் விளையாட்டு அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜே. ஷா மற்றும் பல கோடீஸ்வர வர்த்தகர்களும் வருகை தந்திருந்தனர். இவர்கள் அனைவரும் தற்போது மீண்டும் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

பல்வேறு சர்ச்சைக்குரிய சூழலுக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *