நேசம் நாடும் நெஞ்சங்கள்

உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு – ஆஸ்திரேலியா தமிழ் யூனியனால் நிரந்தர மருத்துவ நிதியுதவி

உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு பயனாளிகளுக்கான ஆஸ்திரேலியா தமிழ் யூனியனால் வழங்கப்படுகின்ற நிரந்தர மாதாந்த மருத்துவ நிதியுதவி

உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 157 பயனாளிகளின் மாதாந்த மருத்துவத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஆஸ்திரேலியா தமிழ் யூனியன் (Australia Tamil Union) வழங்கிய உதவி பற்றிய விபரம்:

* எமது அமைப்பின் வேண்டுகோளை ஏற்று, 157 பயனாளிகளின் மாதாந்த மருத்துவத் தேவைகளுக்கான உதவியை மாதாந்தம் வழங்குவதற்கு இவர்கள் முன்வந்துள்ளனர்.

* இதன் முதற்கட்டமாக, 2026ஆம் ஆண்டின் மாசி (பெப்ரவரி) மாதத்திற்குத் தேவையான மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்து வழங்கியுள்ளனர்.

* எமது பயனாளிகளுக்கான இந்த மருத்துவ உதவியைத் தொடர்ந்து வழங்குவதாக அவர்கள் எமக்கு உறுதியளித்துள்ளனர்.

* எமது அமைப்பிற்கு இதுவரை காலமும் மருத்துவ உதவி செய்தவர்கள் மற்றும் இனி வரும் காலங்களிலும் எமக்கு மருத்துவ உதவி செய்ய விரும்புபவர்கள், ஆஸ்திரேலியா தமிழ் யூனியனுடன் (Australia Tamil Union) இணைந்து அவர்களின் கரங்களை வலுப்படுத்தி, எமது பயனாளிகளுக்கான இந்த நிரந்தர மருத்துவ உதவியைத் தொடர முன்வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஆஸ்திரேலியா தமிழ் யூனியன் (Australia Tamil Union) அமைப்பினரே எமது அமைப்பிற்கு நோயாளர் காவு வண்டியை (Ambulance) வாங்கித் தந்தவர்கள் என்பதை இவ்விடத்தில் நினைவு கூறுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் எமது பயனாளிகள் அன்று முதல் இன்று வரை பெரும் பயன் பெற்று வருகின்றனர், இனி வரும் காலங்களிலும் பயன்பெறுவார்கள்.

* எமது உறவுகளின் வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்திய ஆஸ்திரேலியா தமிழ் யூனியன் அமைப்பிற்கு எமது உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு பயனாளிகள் சார்பாக இதயபூர்வமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
நிர்வாகம்,
*உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *