உலகம்

ஏதோ ஒரு வழியில் நாங்கள் கிரீன்லாந்தை எடுத்துக்கொள்வோம் ; அடங்காத ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த பல நாட்களாகவே கிரீன்லாந்தை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என தொடர்ந்து சொல்லி வருகிறார்.

மிரட்டியும் வருகிறார்.. கிரீன்லாந்து நாடு தற்போது டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. கிரீன்லாந்தில் ஏகப்பட்ட கனிம வளம் இருக்கிறது.. அதோடு பூமிக்கு அடியில் பல இராணுவ தடவாளங்களை அமெரிக்க அமைத்திருக்கிறது.

மேலும் அந்த தீவு ரஷ்யாவுக்கு மிகவும் அருகில் இருப்பதால் அங்கு ரேடார் அமைத்தால் ரஷ்யாவை சுலபமாக கண்காணிக்க முடியும்.. இதுபோன்ற பல காரணங்களால்தான் கிரின்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற நினைக்கிறது.. முதலில் கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவோம் என டிரம்ப் கூறினார்.

ஆனால் கிரீன்லந்தை விற்க முடியாது என டென்மார்க் அதிபர் கூற ‘ஏதோ ஒரு வழியில் நாங்கள் கிரீன்லாந்தை எடுத்துக்கொள்வோம்’ என டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

மேலும் நாங்கள் கிரீன்லாந்தை கைப்பற்றவில்லை என்றால் சீனாவோ, ரஷ்யாவோ அதை கைப்பற்றி விடும் எனவும் தொடர்ந்து சொல்லி வருகிறார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் ‘கிரீன்லாந்தை வாங்க ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடைபெற்று வருகிறது’ எனக் கூறியிருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *