உலகம்

சிரியாவிலிருந்து ஈராக்கிற்கு 5,700 க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். கைதிகள் மாற்றும் நடவடிக்கை நிறைவு – அமெரிக்கா அறிவிப்பு

சிரியாவிலிருந்து 5,700 க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIL/ISIS) கைதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை ஈராக்கிற்கு
மாற்றும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

23 நாட்கள் நீடித்த பரிமாற்ற நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி அன்று தொடங்கிய நிலையில்
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் சிரியாவில் உள்ள தடுப்பு மையங்களிலிருந்து ஈராக்கிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி அன்று வடகிழக்கு சிரியாவிலிருந்து ஈராக்கிற்கு ஒரு இரவு விமானம் மூலம் கைதிகள் மாற்றப்பட்டதாகவும்,
அவர்கள் பாதுகாப்பாக தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்கா சுமார் 7,000 கைதிகளை மாற்றத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது.

சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த இந்த கைதிகள், குர்திஷ் தலைமையிலான SDF கட்டுப்பாட்டில் உள்ள சிரிய சிறைகளில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் அந்தப் பகுதிகளை சிரிய அரசு மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, அமெரிக்கா தலையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *