உலகம்

வெளிநாட்டில் இலங்கை இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அவலம் ; நிர்கதியான மனைவி மற்றும் குழந்தை

ஐரோப்பிய நாடான ருமேனியாவில் உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இலங்கையர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் ருமேனியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தன்று, குறித்த ஊழியர் வாடிக்கையாளருக்கு உணவை விநியோகம் செய்யச் சென்று கொண்டிருந்த போது மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு சென்ற அவசர மருத்துவக் குழுவினர், காயமடைந்த ஊழியருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *