இலங்கை

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி விழா தடையின்றி இடம்பெற வேண்டும்; சத்தியலிங்கம் எம்.பி. வலியுறுத்து

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று 15ஆம் திகதி சிவராத்திரி விழா எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் குறித்த ஆலயத்திற்கான காணி மற்றும் பாதை விடுவிப்பு தொடர்பில் தன்னால் வடக்கு மாகாண ஆளுனருக்கும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக ஆளுநரால் பிரதேச செயலாளரிடம் அறிக்கை கோரப்பட்டது. பல மாதங்கள் கடந்தும் அந்த அறிக்கை அனுப்பப்படவில்லை. ஏன் அது அனுப்பப்படவில்லை எனவும் கேள்வியெழுப்பியிருந்தார். விரைவில் அறிக்கையினை சமர்ப்பிப்பதாக பிரதேச செயலாளர் பதிலளித்திருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *