பலதும் பத்தும்

நடுக்கடலில் துள்ளி விளையாடிய அரிய வகை டால்பின்

பொதுவாகவே இந்த உலகில் காணப்படும் பல்வேறு உயிரினங்கள் இயற்கையின் விந்தையை அவ்வப்போது பறைசாற்றிக்கொண்டே தான் இருகின்றது.

அந்தவையில், பலரையும் வியப்பில் ஆழ்த்தும் அமேசான் நதி டால்பின்கள் (Amazon river dolphins) இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

உலகின் மிகவும் அசாதாரண கடல் பாலூட்டிகளாக அறியப்படும் இவற்றின் நிறம் பார்ப்போரை வியக்க வைக்கின்றது. ஏனைய டால்பின்களை போல் சாம்பல் நிறத்தில் இல்லாமல் இவை இளம்சிவப்பு நிறத்தில் இருப்பதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக அமேசான் நதியில் டால்பின்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதாக சில அரிய புகைப்படங்கள் வெளியாகி சமீபத்தில் இணையத்தில் வைரலாகியிருந்தது. ஆனால் இவ்வாறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் புகைப்படங்கள் உருவாக்கப்படுவதால் இது உண்மையா, இல்லை போலியா என்ற குழம்பம் ஏற்பட்டது.
ஆனால் அமேசான் நதி டால்பின்கள் (Amazon river dolphins) இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு, அவற்றிற்கு வயதாகும்போது ஏற்படும் தோல் மாற்றங்களே முக்கிய காரணம் என அறிவியல் ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றது.

வயதாகும் போது, டால்பின்களின் தோலில் நிறமி (pigment) குறைவாக இருப்பதால், தோலுக்கு அடியில் உள்ள இரத்த நாளங்கள் (capillaries) பளபளப்பான இளஞ்சிவப்பு நிறத்தை வெளிப்படுத்துவதாலேயே இவ்வாறு தோற்றமளிக்கின்றது. மேலும், அவற்றின் உணவுக் பழக்கம் ஆகியவையும் அதன் நிறத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது என குறிப்பிடப்படுகின்றது.

ஆனால், இவை பிறக்கும்போது சாம்பல் நிறத்திலேயே இருக்கும். பின்னர் மேற்குறிப்பிட்ட இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறுகின்றன. ஆண் டால்பின்கள் சண்டையிடும் போது ஏற்படும் தழும்புகளாலும் இளஞ்சிவப்பு நிறம் ஏற்படுகின்றதாம்.ஆண் டால்பின்கள் பெண் டால்பின்களை விட அதிக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

குறித்த அமேசான் நதி டால்பின் அல்லது போடோ என்று அழைக்கப்படும் இந்த அரிய நன்னீர் பாலூட்டி, பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களைக் கவர்ந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *