இலங்கை

இந்தியாவின் பலாத்காரங்கள் அநுர ஊடாக வந்தாலும் அஞ்சோம்; விடுதலையான பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவிப்பு 

இந்தியாவின் பலாத்காரங்கள் ஜனாதிபதி அநுர ஊடாக வந்தாலும் நாம் பயம் கொள்ளப் போவதில்லை. பயங்கர யுத்தத்தை வெற்றிக் கொண்ட இராணுவ வீரர்களின் பிராண வாயுவை சுவாசிக்கும் எங்களை யாராலும் அச்சுறுத்த முடியாது என பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

திருகோணமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர்சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேருக்கும் பல நிபந்தனையின் கீழ் திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் புதன்கிழமை பிணை வழங்கிய நிலையில் கஸ்ஸப தேரர் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் ,

ஜனாதிபதி என்பவர் இந்த நாட்டின் தற்காலிக பாதுகாவலர்.அவருக்கு தெரிய வேண்டும், இந்த சிங்கள பௌத்த இராச்சியத்தை எதிர்கால தலைமுறைக்கு பாதுகாத்து வழங்க வேண்டும் என.

ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை மீறி பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டுள்ளனர்.சிங்கள பௌத்த விரோத துரோகிகளான இந்த ஆட்சியாளர்களால் நாம் 29 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம்.

டில்வின் சில்வாவுக்கு இந்த கதை தெரியும்.தொலைபேசி அழைப்பொன்றை எடுத்த இதை இப்படி தீர்த்து கொள்வோம் என்றார்.ஆனால் நாங்கள் போராட்டத்தை காட்டிப் கொடுக்க வில்லை.

ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க இந்தியாவுடன் ஏழு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார். இந்தியாவின் போட் சிட்டி ஒன்றை அமைக்கவே ஜனாதிபதி அநுர முயற்சிக்கிறார்.

அமைச்சர் சுனில் வட்டகல, கடிதத் தலைப்பொன்றை எடுத்து கொண்டு ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு குறிப்பிட்டார்.ஏனென்றால் இந்த காணியை இந்தியாவுக்கு வழங்கி அதில் ஹோட்டல் ஒன்றை அமைக்கவே திட்டமிட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *