இலங்கை

‘அரகலய’ போராட்ட காலத்தில் பாராளுமன்றைத் தீக்கிரையாக்க முயன்றோரையும் தூக்கிலிடுங்கள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவை கொலை செய்தவர்களுக்கு வழங்கப்பட்டதைப்போல, “அரகலய” (போராட்ட) காலப் பகுதியில் பாராளுமன்ற வளாகத்திற்குத் தீ வைக்க முயற்சி செய்தவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கியமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். நாட்டில் சட்டம் செயற்படுத்தப்பட வேண்டும். எம்.பி.க்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது மாத்திரமன்றி பாராளுமன்றத்திற்கு தீ வைக்கவும் குழுவொன்று வந்தது. இப்போது அவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கும் சட்டம் செயற்படுத்தப்பட வேண்டும்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவை கொலை செய்தவர்களுக்கு வழங்கப்பட்டதைப்போல, “அரகலய” (போராட்ட) காலப் பகுதியில் பாராளுமன்ற வளாகத்திற்குத் தீ வைக்க முயற்சி செய்தவர்களுக்கும், மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.ஆனால் இந்த அரசாங்கத்தில் அதனை எதிர்பார்க்க முடியாது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *