பலதும் பத்தும்
கோமாவிலிருந்து 55 நாட்களின் பின் வீடியோவால் மீண்ட சிறுவன்!

சீனாவின், ஹுனான் மாகாணத்தின் யுயாங்கைச் சேர்ந்த சுக்சி (Shuoxi), என்ற மாணவர், கடந்த ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற ஒரு கார் விபத்தில் படுகாயமடைந்து கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.
குறித்த விபத்தில் இந்த சிறுவன் மூளை மற்றும் நுரையீரல் பாதிப்புடன் உயிருக்குப் போராடி வந்த நிலையில், நண்பர்களின் அன்பான குரல் அவரை மீட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம் குறித்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவன் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என குறிப்பிட்டமையால், எல்லோரும் சிறுவன் மீது நம்பிக்கை இழந்திருந்தாலும், அவன் உயிர் பிழைப்பான் என்று நம்பிய ஒரே ஜீவன அவனது தாய் தான்.
இவர் தாயின் தளராத நம்பிக்கை மற்றும் விடாப்பிடியான போராட்டமே தனது மகனை மீட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த காணொளி வாயிலான அறிந்துக்கொள்ளலாம்.
![]()