பலதும் பத்தும்

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish!

பொதுவாகவே இயற்கையில் ஏராளமான மர்மங்களும், வியக்க வைக்கும் அற்புதங்களும் காணப்படுகின்றது என்பது நாம் அனைவருதே அறிந்தது தான்.

அந்தவையில், கடல்களில் வாழும் பல அதிசய உயிரினங்களில் ஒன்றுதான் பஃபர் (Puffer Fish). எனப்படும் ஒரு மீன் இனம்.

அந்த வகை மீன்களில் ஆண் மீன்கள் தங்களின் துணையை கவருவதற்கான மனிர்களின் அறிவாற்றலையே மிஞ்சும் அளவுக்கு அழகிய ஒரு கலைப்படைப்பை கடலுக்கு அடியில் தனியாக உருவாக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆம், இவற்றின் இந்த கலைப்படைப்பு puffer fish sea floor design என்று அழைக்கப்படுகின்றது. அதன் பின்னணியில் இருக்கும் வியக்க வைப்பும் பல அறிவியல் காரணங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பஃபர் மீன்கள் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் விதமாக தன் உடலை பல மடங்கு பெரிதாக்கிக் கொள்ளும் திறன் கொண்டவையாக அறியப்படுகின்றது. இது இவ்வாறு உடலை பெரிதாக்கிக்கொள்வதால், எதிரிகளை பயமுறுத்தி தப்பித்துக்கொள்கின்றது.

இந்த மீன் இனமானது தனது வித்தியாசமான தோற்றம் காரணமாக உலகெங்கிலும் மிகவும் பிரபலமானது. ஆனால் இது பற்றி பல சுவாரஸ்யமாக உண்மைகள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பது கிடையாது.

இந்த மீன்கள் தனது இணையை கவரும் நோக்கில் கடலுக்கும் அடியில், உருவாக்கும் ஒரு அலங்கார கலை படைப்பானது, மனிதர்களாலோ அல்லது வேற்றுகிரகவாசிகளாலோ உருவாக்கியிருக்கலாம் என சிந்திக்கும் அளவுக்கு வியப்பூட்டும் வகையில் இருக்கும். இந்த சிறிய மீன் தான் அதை உருவாக்கியது என்றால் யாராலும் நம்பவே முடியாது.

இந்த மீன்கள் இனச்சேர்க்கை காலத்தில், ஆண் பஃபர்ஃபிஷ் ஒரு பெண்ணை ஈர்க்க கடற்பரப்பில் இந்த சிக்கலான வட்ட வடிவத்தை உருவாக்குகிறது.

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா? | Interesting Facts About Puffer Fish Floor Design

கிட்டத்தட்ட ஒரு வாரம் இடைவிடாமல் வேலை செய்து, தனது சிறிய செதில்களை மட்டுமே பயன்படுத்தி மணலை அங்குலம் அங்குலமாக செதுக்கி, சரியான சமச்சீர் முகடுகளையும் பள்ளத்தாக்குகளையும் இவை கடலுக்கு அடையில் உருவாக்குகின்றது.

உண்மையில் இந்த மீனிக் வலிமை, பொறுமை மற்றும் திறமையின் அடையாளமாகவே இந்த வட்ட வடிவ படைப்பு பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்த மீன்கள் நுண்ணிய மணல் மற்றும் ஓடு துண்டுகளை கவனமாக சேகரித்து வட்டத்தின் மையத்தில் வைத்து, வாரக்கணக்கில் இந்த வடிவமைப்பை மேம்படுத்துகிறது.

அதில் சிறிய குப்பைகள் அல்லது தேவையற்ற பொருட்கள் இந்த வடிவத்தை பாதித்தால், அது உடனடியாக அதை சுத்தம் செய்கிறது. இந்த சிறிய மீன்களுக்கு இவ்வளவு அறிவாற்றலா? என்பது பார்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.

இந்த அமைப்பின் சமச்சீர் மற்றும் துல்லியமானது மிகவும் முக்கியமானது, காரணம் பெண் மீன்கள் முடிவெடுப்பதற்கு முன்னர் இந்த அமைப்பை உன்னிப்பாக ஆய்வு செய்த பின்னரே துணையாக ஏற்றுக்கொள்ளுமாம்.

அறியில் ஆய்வுகளின் அடிப்படையில், இந்த கலைப்படைப்பு அழகுக்காக மட்டுமல்ல, அதன் வடிவம் நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்த உதவுவதுடன் பெண் மீன்கள் இடும் முட்டைகளுக்கு பாதுகாப்பான சூழலையும் உருவாக்கிக்கொடுக்கின்றது.

அந்த படைப்ப்பை பார்த்தவுடன் ஒரு பெண் மீன் ஈர்க்கப்பட்டால், ​​அது வட்டத்தின் மையத்தில் தனது முட்டைகளை இடுகிறது, ஆண் மீன் அவற்றை கருவுறச் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்கள் தங்கள் துணையை ஈர்க்க எப்படி தொழில் திறமை, வீடு, வாகனம், வெளித்தோற்றம் என்பவற்றை சிறப்பாக வைத்திருக்க நினைக்கின்றார்களோ, அதையே இந்த மீன்களும் செய்கின்றது. இயற்கையின் முன்னிலையில், விதிகள் யாவருக்கும் ஒன்று தான் என்பதை பறைசாற்றும் வகையில் இந்த பஃபர் மீன்களின் வாழ்க்கை முறை அமைகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *