பலதும் பத்தும்

இறந்த மனைவிக்காக இப்படியும் வாழ முடியுமா?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மக்களின் மனம் கவர்ந்த தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம், யார் வாழ்க்கை மிக துயரமானது? கணவனை இழந்தவர்கள் மற்றும் மனைவியை இழந்தவர்கள் என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அதில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரைவிட்ட தன் மனைவியை நினைத்து உடல் முழுவதும் அவரின் உருவத்தை பச்சைகுத்திக்கொண்டு அவருக்கானவே வாழ்வதாக அரங்கத்தில் கண்ணீர் மல்ல பேசிய காணொளி இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென ஒரு தனித்துவமாக ரசிகர் படையே இருக்கின்றது.

இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது சுவாரஸ்யமான கலந்துரையாடல் வாரம் தோறும் நடைபெற்று வருகின்றது.

ஆணின் காதலை உலகிற்கு காட்டிய இளைஞன்! இறந்த மனைவிக்காக இப்படியும் வாழ முடியுமா? | Tamizhatamizha Men In Love Painful Video Viral

அந்தவகையில், இந்த வாரம் தமிழா தமிழா நிகழ்ச்சியில், யார் வாழ்க்கை மிக துயரமானது? கணவனை இழந்தவர்கள் மற்றும் மனைவியை இழந்தவர்கள் என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதில் பங்கேற்ற மனைவியை இழந்த இளைஞர் ஒருவர் தன் மனைவி மீது கொண்ட தீராத காதலால் செய்துள்ள விடயங்கள் கேட்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. குறித்த கண்ணீர் மல்க வைக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *