பலதும் பத்தும்

காட்டு தீயை உருவாக்கும் பருந்து!; வியக்க வைக்கும் காரணம் தெரியுமா?

பொதுவாகவே இயற்கையில் நமது அறிவுக்கு எட்டாத வியப்பூட்டும் விடயங்கள் பல நிறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்தது தான்.

அந்தவகையில், ஒரு பறவை காட்டு தீயை உருவாக்கும் நோக்கில் தெரிந்தே செயற்படுகின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆம் ஆஸ்திரேலிய ஃபயர்ஹாக்ஸ் எனப்படும் ஒரு பருந்து இனம் காட்டில் தீயை வேண்டுமென்றே பரப்புகின்றது.

இந்த விசித்திர செயலுக்கு பின்னால் உள்ள காரணம் குறித்தும் இந்த பருந்து இனத்தின் சுவாரஸ்யமான குணம் குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஆஸ்திரேலிய “ஃபயர்ஹாக்ஸ்” எனப்படும் குறித்த பருந்து இனம், வடக்கு ஆஸ்திரேலியாவில் செரிந்து வாழ்க்கின்றது.

இவை ஒரு இடத்தில் மனிதர்களால் பற்றவைக்கப்பட்ட தீயில் இருந்தோ, அல்லது ஏற்கனவே எரியும் காட்டு தீயில் இருந்தோ ஒரு எரியும் குச்சியை வேண்டும் என்றே இன்னொரு இடத்துக்கு கொண்டு போய் போட்டு தீயை பரப்புகின்றது.

இவை ஏன் இவ்வாறு செய்கின்றது என்பது இன்னும் வியக்க வைக்கின்றது. ஒரு இடத்தில் தீயை பரப்பும் போது, அதிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள அங்கிருக்கும் உயிரினங்கள் உடனடியாக வெளியேறும் எனவே அதை எளிமையாக வேட்டையாடலாம் என்பதற்காகவே இவை தீயை பரப்புகின்றது என்பது ஆய்வு ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஃபயர்ஹாக் பருந்து இனத்தில் முதன்மை பறவைகளாக பிளாக் கைட் (மில்வஸ் மைக்ரான்ஸ்), விசில் கைட் (ஹாலியஸ்டூர் ஸ்பெனுரஸ்) மற்றும் பிரவுன் ஃபால்கன் (பால்கோ பெரிகோரா) போன்றவை அறியப்படுகின்றது.

பழங்குடியின ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நடத்தை பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள் மற்றும் இது குறித்து தங்களின் குறிப்புகளில் ஆவணப்படுத்தியும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பருந்து மனிதர்கள் நெருப்பை உருவாக்க கற்றுக்கொள்ளும் முன்னர் இருந்தே, நெருப்பை கையாளும் திறனை கொண்டிருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மனிதர்களால் மட்டுமே நெருப்பைக் கையாளவும் முடியும் என்ற கருத்தை ஒரு பறவை சவால் செய்வது வியப்பான விடயம் தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *