இலங்கை

தமிழரசுக் கட்சிக்காக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எப்போது முடிவடைகின்றதோ அப்போதுதான் பொதுச் சபைக் கூட்டம்

தமிழரசுக் கட்சிக்காக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எப்போது முடிவுறுத்தப்படுகின்றதோ அப்போதுதான் எமது கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் நடைபெறும். வழக்கு இருக்கும் வரை பொதுச்சபை கூட்டம் நடப்பதற்குரிய வாய்ப்புகள் இல்லை. வழக்கு வைத்தவர்கள், வழக்கு வைக்க தூண்டியவர்கள்தான் இந்த விடயம் பற்றி ஊடகங்களுக்கு பதிலளிக்க முடியும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்  வெல்லாவெளியில் நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தமிழரசுக் கட்சியில் எட்டு பேரைக் கொண்ட பாராளுமன்ற குழு ஒன்று உள்ளது. அந்த பாராளுமன்றக் குழு ஊடாக பாராளுமன்றக் குழுத் தலைவர் தெரிவு செய்யப்பட்டாரா எனப் பலரும் கேட்கின்றார்கள். ஆனாலும் எமது கட்சியின் அரசியல் குழு தான் பாராளுமன்றக் குழுத் தலைவரை தெரிவு செய்திருக்கின்றதே தவிர எமது பாராளுமன்றக் குழுவிடம் இந்த பாராளுமன்றக் குழுத் தலைவர் தெரிவு சம்பந்தமாக பேசவில்லை. மாறாக அரசியல் குழு முடிவு எடுத்த பின்னர் அந்த செய்தியை சொன்னார்கள். பாராளுமன்றக் குழுவிடம் கலந்தாலோசித்த பின்னர் அந்த முடிவை அவர்கள் எடுக்கவில்லை.

எமது கட்சிக்காக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எப்போது முடிவுறுத்தப்படுகின்றதோ அப்போதுதான் எமது கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் நடைபெறும். வழக்கு இருக்கும் வரை பொதுச்சபை கூட்டம் நடப்பதற்குரிய வாய்ப்புகள் இல்லை. வழக்கு வைத்தவர்கள், வழக்கு வைக்க தூண்டியவர்கள்தான் இந்த விடயம் பற்றி ஊடகங்களுக்கு பதிலளிக்க முடியும்.

இலங்கை தமிழரசு கட்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக அது பதிவு செய்யப்படாது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *