இலங்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக ஜெனிவாத் தொடருக்கு முன் புதிய சட்டம் வரமாட்டாது

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக, இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டுவரப்படாது என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஹிரு செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அதன்படி, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கான பொதுமக்கள் கருத்துக்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கான கால அவகாசம் எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, பொதுமக்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு, உத்தேச சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படும் எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், எதிர்வரும் 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.இதன்போது, இலங்கையின் முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும் முன்வைப்புகள் எதிர்பார்க்கப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பின்புலத்தில் இந்த தடவையும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் தொடர்பில் இலங்கை சார்பில் எவ்வித முன்னேற்றங்களையும் சமர்ப்பிப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்பது தற்போது தெரியவருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *