கவிதைகள்

கோயில் பூஜை… கவிதை…. முல்லைஅமுதன்

பெண் பார்க்கலாம்
அம்மாவுடன் சென்றிருந்தோம்.

அலைபேசிக்குள்
மூழ்கிப்போயிருந்தாள் தங்கை.

வாசலில் விட்டு வந்த
காலணி பற்றிய கவலையில் இருந்தாள்.

நேற்று பார்த்த சீரியல் பெண்ணைப் பற்றிய விமர்சனத்தில்
பாட்டி பேசினாள் அவளொத்த தோழிகளுடன்.

கண்களால் கணக்கெடித்தபடி
வேட்டிய சரிசெய்துவிட்டு
கர்ப்பக்கிருகத்துள் நுழைந்தார் ஐயர்.

அர்ச்சனைச் சீட்டு வாங்கொண்டே
கோயில் பற்றி அங்கலாய்க்கும் அப்பா.. இன்னும் சிலர்..
பெண் வந்திருக்கவில்லை.

பூஜைக்காக திரைச்சீலை மூடித் திறந்தது..

சலிப்படைந்த கடவுள் சொல்லாமலேயே இறங்கி –
வெளியேறினார்..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *