பலதும் பத்தும்

6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் அலுவலக வேலை அல்லது செல்போன் மோகம் காரணமாக இரவு நீண்ட நேரம் கண் விழித்து இருக்கிறார்கள். ஆறு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். தினமும் இரவு 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால் உடலில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா? | Can Sleeping Less Than 6 Hours Cause Many Problems

நீரிழிவு நோய் ஏற்படும்

தினமும் 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இரட்டிப்பாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா? | Can Sleeping Less Than 6 Hours Cause Many Problems

 உடல் பருமன் அதிகரிக்கும்

தினமும் இரவு 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பசியைத் தூண்டும் ஹார்மோர்ன் அதிகரிக்கும். அதிகப்படியான தேவையற்ற உணவுகளை சாப்பிட நேரலாம். 7-8 மணி நேரம் தூங்குபர்களை விட ரத்தக்குழாயில் அதிக கொழுப்பு படிவதாக தெரியவந்துள்ளது.

6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா? | Can Sleeping Less Than 6 Hours Cause Many Problems

மறதி நோய் ஏற்படும்

ஆறு மணி நேரம் அல்லது அதற்கு குறைவாக தூங்கி வந்தால், மூளையில் நச்சுக்கள் குவியும். பிறகு எதிர்காலத்தில் அறிவாற்றல் குறைபாடு அல்லது மறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. நினைவாற்றல் குறைபாடு, முடிவெடுக்கும் திறன் குறைவு, கவனச் சிதறல் போன்றவையும் குறைந்த தூக்கத்தால் ஏற்படுகின்றன.

6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா? | Can Sleeping Less Than 6 Hours Cause Many Problems

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *