பலதும் பத்தும்

ஆள்பலத்தை 40% குறைக்க உதவும் தொழில்நுட்பம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நாட்டில் முதன்முறையாக ஒரு கான்கிரீட் கட்டமைப்பை வெற்றிகரமாக முப்பரிமாண முறையில் அச்சிட்டுள்ளனர் .

அது மனிதவளத்தை 40 சதவீதத்துக்கும் மேல் குறைத்து செயல்திறனை 60 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கிறது.

பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்யும் அதே வேளையில் ஊழியர் பற்றாக்குறையையும் இது நிவர்த்தி செய்கிறது.

கட்டுமான நடைமுறைகளை மறுவடிவமைக்கத் தொழில்நுட்பம் உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

முப்பரிமாண முறையில் அச்சிட்டுத் தனது சொந்த எடையைத் தாங்கக்கூடிய ஒரு கான்கிரீட் கட்டமைப்பை ஆய்வாளர்கள் உருவாக்குவது அது முதல் முறை.

கட்டமைப்பின் பலத்தை உறுதிசெய்யக் குழு அதைத் தொடர்ச்சியான சோதனைகளுக்கு உட்படுத்துகிறது.

தற்போதுள்ள முறைகளுடன் கான்கிரீட் முப்பரிமாண அச்சீட்டு முறையைப் பயன்படுத்தக் குழு முனைகிறது.

அதற்கான புதிய வழிகாட்டிகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பெப்ரவரி 6ஆம் திகதி வௌ்ளிக்கிழமை அன்று வெளியிட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *