பலதும் பத்தும்

வைரஸ் தொற்றால் சென்னையில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான காகங்கள்!

சென்னை முழுவதும் கடந்த சில நாட்களில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்து கிடந்தன.

உயிரிழந்த காங்கள் ஆய்வக சோதனைகளில் H5N1 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சோதனை இப்பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவுவதை எடுத்துக் காட்டுகின்றது.

இதேவேளை, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் தயாராகி வருவதால், பொது மக்களுக்கு விசேட சுகாதார ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வைரஸ் பரவுவதைத் தடுக்க, உயிரிழந்த காகங்கள் மற்றும் கோழிகளின் அனைத்து உடல்களையும் உயிரியல் பாதுகாப்பு நெறிமுறைகளின்படி எரிக்க அல்லது ஆழமாகப் புதைக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இறந்த பறவைகளைத் தொடுவதையோ அல்லது கையாளுவதையோ பொதுமக்கள் கண்டிப்பாகத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மர்மமாக உயிரிழந்த ஏதேனும் பறவைகள் தென்பட்டால் உள்ளூர் அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சு, தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உடனடி மற்றும் விரிவான கள கண்காணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *