பலதும் பத்தும்

ஒரு பேருந்தின் அளவுக்கு வளரக்கூடிய இராட்சத ஜெல்லி மீன் கண்டுப்பிடிப்பு!

அர்ஜென்டினா கடற்கரையிலிருந்து அரிய மற்றும் இராட்சத ஜெல்லி மீன்
ஒன்று படம்பிடிக்கப்பட்டுள்ளது.

தோராயமாக 820 அடி ஆழத்தில் இனங்காணப்பட்ட இந்த மீனினம் ஒரு
பேருந்தின் அளவுக்கு வளரக்கூடியது என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பெயர் ஸ்டைகியோமெடுசா ஜிகாண்டியா (Stygiomedusa gigantea) என
அறிவிக்கப்பட்டுள்ளது. 30 அடிக்கு மேல் நீளமுள்ள அதன் நீண்ட
கைகள், இரையை இலகுவாக பிடிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக
ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை குறித்த கடற்பகுதியில் புழுக்கள், பவளப்பாறைகள், கடல்
அர்ச்சின்கள், கடல் நத்தைகள் மற்றும் அனிமோன்கள் உட்பட 28
சாத்தியமான புதிய இனங்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒரு பேருந்தின் அளவுக்கு வளரக்கூடிய இராட்சத ஜெல்லி மீன் கண்டுப்பிடிப்பு!  Giant jellyfish discovered that can grow to the size of a bus

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *