பலதும் பத்தும்

முழு கிரகத்தையும் அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் ரஷ்யா வசம் 

முழு கிரகத்தையும் அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் தங்களிடம்
இருப்பதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியான தேசியவாத நாடாளுமன்ற
உறுப்பினர் அலெக்ஸி ஜுராவ்லேவ் (Alexey Zhuravlev) அணு ஆயுதக்
குறைப்பு தொடர்பான START ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறி வருவதாகக்
குற்றம் சாட்டியுள்ளார்.

அதேநேரம் “எந்தவொரு நாட்டையும் அழிக்கக்கூடிய அல்லது முழு
கிரகத்தையும் முற்றிலுமாக அழிக்கக்கூடிய ஆயுதங்களை ரஷ்யா
வைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சர்வதேச அணுசக்தி பாதுகாப்பை நிர்வகிக்கும் அடிப்படை ஆவணமான
மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை (START) அமெரிக்கர்கள் பல
ஆண்டுகளாக நடைமுறையில் பின்பற்றவில்லை என்று ஜுராவ்லேவ்
அறிவித்துள்ளார்.

ஓரெஷ்னிக் போன்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் வருகை அணு ஏவுகணைகளின்
மதிப்பைக் குறைக்கிறது என்றும், “இந்த புதிய வகை ஆயுதம், அணு
ஆயுதம் இல்லாவிட்டாலும், ஒரு எதிரிக்கு பேரழிவை ஏற்படுத்தும்
அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்றும்
சுட்டிக்காட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *