பாராளுமன்றக் குழுத் தலைவராக இருந்த சிறீதரனின் பதவி பறிப்பு சாணக்கியன் நியமனம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக மட்டக்களப்பு மாவட்டஎம்.பி.யான இரா.சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இதுவரை இருந்த யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறீதரனின் இடத்துக்கே கட்சித் தலைமையினால் இரா.சாணக்கியன் எம்.பி.நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாகவிருக்கும் சிறீதரன் இலங்கையின் கணக்காய்வாளர் நாயகமாக ஜனாதிபதியினால் பெயரிடப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு ஆதரவாக வாக்களித்ததால் அது தமிழரசுக் கட்சியினதும் தமிழ் மக்களினதும் நிலைபாடுகளுக்கு முரண்பாடானதெனத் தெரிவித்து அவரை அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு தமிழரசுக் கட்சியின் தலைமை அறிவுறுத்தியது.ஆனால் அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலக சிறீதரன் எம்.பி மறுத்து விட்டார்.
இதனையடுத்தே , சிறீதரன் இனி பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியை வழிநடத்தத் தகுதியற்றவர். அத்துடன் அவர் பதவியிலிருந்து விலக மறுத்ததன் காரணமாக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சிஅறிவித்தது.
இவ்வாறான நிலையிலேயே இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இதுவரை இருந்த யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டு அவரின் இடத்துக்கு கட்சித்தலைமையினால் மட்டக்களப்பு மாவட்டஎம்.பி.யான இரா.சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா.சாணக்கியன் நியமனம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தமிழரசுக்கட்சி தலைமையின் கடிதம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
![]()