இலங்கை

இன்றைய கரிநாள் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்; சிறீதரன் எம்.பி.வேண்டுகோள்

தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் இலங்கை சுதந்திர தினம் கரிநாளாக அனுஷ்டிக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக மாணவர்கள் இன்றையதினம் முன்னெடுக்கும் போராட்டமானது மிகவும் பெறுமதியானது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட இனம். எமக்கு இந்த நாட்டில் சமஷ்டி முறையிலாக தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனைகள் பல ஆண்டுகளைத் தாண்டியும் தீர்க்கப்படவில்லை.

எனவே சுதந்திர தினத்தன்று இடம்பெறும் கரிநாளுக்கு வர்த்தக சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *