இலங்கை

31 ஆண்டுகள் கடந்தும் விடுவிக்கப்படாத தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது?; நல்லூரில் கலந்துரையாடல் 

31 ஆண்டுகள் கடந்தும் விடுவிக்கப்படாத தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது? எனும் தலைப்பிலான கலந்துரையாடல் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (31) மாலை 3.15 மணி தொடக்கம் மாலை 4.15 மணி வரை யாழ்.நல்லூரிலுள்ள சிவகுரு ஆதீன மண்டபத்தில் நடைபெறும்.

நீண்டகால சிறைவாசம் காரணமாக எஞ்சியுள்ள பத்து தமிழ் அரசியல் கைதிகள், முதியவர்கள், நோயாளிகள், சிறையில் இளமையை இழந்தவர்கள் என உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுத் தினம் தினம் விடியலை எதிர்பார்த்து நடைப் பிணங்களாகச் சிறையில் வாடுகின்றனர்.

தற்போதைய அரசு எஞ்சியுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் உடன் விடுதலை செய்வார்கள் என எதிர்பார்த்திருந்த போதிலும் இதுவரை விடுதலை செய்யப்படாதது மிகுந்த ஏமாற்றமும், கவலையுமளிக்கிறது. எனவே, தமிழ் அரசியல் கைதிகளின் துரித விடுதலைக்காக நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து தொடர்ச்சியாகக் குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கலந்துரையாடலில் தமிழ்த்தேசியக் கட்சிகள், சிவில்- சமூக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் அழைப்பு விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *