திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு தையிட்டியில் மீண்டும் தொடர் போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு கோரியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் நாளை சனிக்கிழமையும், (31), நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் (01) நடாத்தப்படவுள்ளது.
நாளை சனிக்கிழமை மாலை 4 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையும், பெளர்ணமி தினமான நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையும் போராட்டம் இடம்பெறும். இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறு தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
![]()