இலங்கை

அர்ச்சுனா எம்.பி.க்கு கொலை அச்சுறுத்தல்?; மல்லாகம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தொலைபேசியில் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்தார்.

குறித்த முறைப்பாடு வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களான வரதராஜா தனகோபி, சிவரூபன் லகீந்தன் மற்றும் மனோகரன் பிரதீபன் ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டினை அடுத்து கடந்த மாதம் 26 ஆம் பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்ப்பட்டுட்டது.

அதனை அடுத்து சம்பவம் தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றம்சாட்டப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி தவணையிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *