ஆகாயப்பந்தல்: 10… ஏலையா க.முருகதாசன்

சசிகலா வேற்றுக்கிரகத்து பெண் என்பதால் அவளால் எதையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் இருப்பதால் மதுசாவை சரவணன் தனது வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வரும்போதே தனது மகனுக்கு மனைவியாகப் போகிறவள்தான் வீட்:டுக்கு வருகிறாள் என அறிவு சொல்லத் தொடங்கியதை அவள் உணர்ந்துவிட்டாள்.“
-சசிகலாவின் நுண்ணறிவு
மதுசாவின் தோள்களில் ஆதரவாக கைவைத்தபடி என்ன மருமகளே பார்வை ஒரே இடத்தில் குத்திட்டு நிற்கிதே,அப்படி என்னதான் எங்களுடைய மருமகளுக்க யோசனையோ எனப் பாசம் தூவிய வார்த்தைகளுடன் சசிகலா கேட்க மதுசா தன்8னையறியாமலே அப்படி ஒன்றுமில்லை மாமி என்று சொன்னவள் தயக்கத்துடனும் வெட்கத்துடன் சசிகலாவைப் பார்க்கிறாள்.தன்னையறியாமல் தான் சரவணனின் தாயை மாமி என்று சொன்னதை நினைத்து வியப்படைகிறாள்.
தான் மாமி என்று சொன்னது வலிந்து வந்த வார்த்தையல்ல என்பதும் அது தன்னை மீறி வந்த வார்த்தை என்பதை உணர்ந்து மதுசா தான் இந்த வீட்டில்தான் வாழப் போகிறேனோ என்று அவளுள் ஒரு உணர்வு தோன்றிய போது அவளையறியாமலே அவளது கன்னங்கள் பூரித்துச் சிவக்கின்றன.
மதுசாவின் கன்னங்கள் சிவந்திருப்பதைக் கண்ட சரவனன் சாரிணியின் தயாரான சசிகலாவும் பூரித்துப் போகிறாள்.

ஒரு குடும்பபத்தில் ஆம்பிளைப்பிள்ளையிருந்தால் அவனுக்குத் திருமணம் செய்து வைக்கும் வயது வந்துவிட்டால் பொதுவாக தாய்மார்தான் தனது மகனுக்கு நல்ல குணமுள்ள,அழகுள்ள ,படிபு;பள்ள மனைவி கிடைக்க வேண்டும் என்று அதை வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும் எங்கேயாவது விழாக்களிலோ,திருமண நிகழ்வுகளிலோ,கோவில்களிலோ காண்கின்ற பொம்பிளைப் பிள்ளைகள் மீது தாய்மாரின் பார்வை செல்வதும் அதிலும் அழகான பொம்பிளைப்பிள்ளைகளாக இருந்துவிட்டால் இந்தப் பிள்ளை எங்கடை மருமகளாக வந்தால் நல்லாயிருக்குமே என அங்கலாய்ப்புதும் தனது மகனின் உடல்வாகுக்கேற்ப அந்தப் பொம்பிளைப் பிள்ளை கம்பீரமாக அழகாக இருந்தால் இன்னும் அதிகம் ஆசை ஏற்படுவதும் உண்டு.
தமக்குத் தெரியாதவர்களாக இருந்தாலும்,மெதுவாக அந்தப் பொம்பிளைப் பிள்ளையுடன் நிற்கும் தாய் தகப்பனுடனோ அல்லது உறவினர்களுடனோ மெதுவாகக் கதை கொடுத்து அவர்கள் வாழும் இடத்தையும் பெயரையும் அறிந்து கொள்வார்கள்.
பேச்சோடு பேச்சாக நீங்கள் ஜேர்மனிக்கு வந்து கனகாலமோ எத்தனை வருசமாக அங்கை இருக்கிறியல் என்று கேட்கையில் தமக்குத் தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் அங்கை இருந்தால் அவர்களின் பெயரைச் சொல்ல அந்த அழகியோடு வந்தவர்கள் ஓ இவையைத் தெரியும் என்று சொல்வார்கள்,சொன்ன கையோடு அவை உங்களுக்குச் சொந்தமோ என்பார்கள்.நீங்கள் வட்டுக்கோட்டை பாலகிருஸ்ணனைத்தானே கேட்கிறியள்,ஏனென்றால் இன்னொரு பாலகிருஸ்ணனும் இருக்கிறார் அவர் காங்கேசன்துறை என்று சொல்ல எங்கடை சொந்தக்காரர் வட்டுக்கோட்டை பாலகிருஸ்ணன் எனச் சொல்ல,மகளோடு வந்த தாய் முகம் மலர அவர் என்ரை மனுசனுக்கு மச்சான் முறை அப்ப நீங்களும் சொந்தக்காரிதான் எனச் சொல்லிக் கொண்டிருக்க,மகளுக்கு எங்கினேம் பார்க்கலையோ என்று தூண்டில் போட பார்க்கிறந்தான் என்று சொல்ல,ஆம்பிளைப் பிள்ளையின் தாய் கட்டிடக் கலைஞர் மாதிரி வரைபடம் வரைந்து வீட்டுக்குப் போறதுக்கு வீதியும் போட்டு திட்டம் போட்டு,இனி இந்தப் பிள்ளைதான் தனது மருமகள்: என முடிவெடுத்து கற்பனையில் பறக்க,பிள்ளைக்கு சாதகம் சாதகமாக இல்லை. பார்க்கிற மாப்பிளையளுக்க எல்லாம் பொருந்தினாலம் கீரியும் பாம்பும் மாதிரி அந்தப் போருத்தம் பொருந்துதில்லை என்று தாய் சொல்ல மனதால் மருமகளாக்கிக் கொண்ட தாய் இந்தப் பிள்ளையின்ரை அந்த அதுவின் விலங்குப் பொருத்தம் தன்ரை மோனுக்குப் பொருந்த வேணும் அதுக்கு இலுப்பைக்கடவை வயிரவா நீதான் அருள வேணும்,அப்படிச் சரிவந்தால் உனக்கு ஆயிரம் வடை மாiயாகக் கட்டிச் சாத்தவன் என்று வேண்டுவதும் உண்டு.
பொருத்தங்களில் அதுதானே முக்கியம்.சும்மா எல்லாரும் சொல்லுவினம் அதென்ன முக்கியமோ என்று,கடகடா டொடா பிரச்சினைகளுக்கு அதூன் உள் காரணம்,சின்னச் சின்ன விசயங்களுக்கும் புருசனும் பெண்சாதியும் எரிஞஇசு விழுறதுக்கு அதுவும் காரணம் என்று சொல்லி முடிக்க மெதுவாக பெண்ணின் அந்த அதுவின் விலங்கு பொருத்தம் என்ன என்பதை கதையோடு கதையாகக் கேட்டு அதை மனப்பாடம் செய்து கொண்டு வீட்டுக்குப் போனதும் தெரிஞ்ச கோவில் ஐயரிடம் இல்லாட்டிச் சாத்திரியிடம் இந்த நட்சத்திரத்துக்கு எந்த நட்சத்திரம் பொருந்து என்று கேட்பதுமுண்டு.
இதில் எந்தச் சிரமமோ உளவு பார்க்க வேண்டிய வேலையோ சசிகலாவுக்கு இல்லை.தங்களுக்கு மதுசா என்ற அழகியை மனநிறைவாகப் பிடித்துவிட்டது.தாங்கள் வேற்றுக் கிரகத்து ஆட்கள் என்ற போதிலும்,பூமி மனிதர்களாக இங்கேயே வாழ்கிறோம்.இங்கேயே வேலை செய்கிறோம்,தமது பிள்ளைகள் இங்கேயுள்ள பல்கலைக் கழகத்திலேதான் படிக்கிறார்கள் ,எவருமே அறியாதவாறு வேற்றுக் கிரகத்துடன் தொடர்புடையவர்கள் என்பதை போகும் நகரத்து மக்களே அறியவில்லை என்பதோடு,அங்குள்ள ஆண்கள் பெண்களுக்கு கல்யாணம் செயது; வைத்தல் என்ற நிலை ஏற்படும் போது பூமி மனிதர்களுடன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு இருந்தவர்களுக்கு மதுசாவைக் கண்டதும் அவள்தான் தமது மருமகள் என மகேந்திரராஜாவும் சசிகலாவும் தீர்மானித்துக் கொண்டனர்.மதுசா அவர்களின் வீட்;டுக்கு வந்து சில மனித்தியாலங்களுக்குள்ளேயே சரவணனின் தாய் முடிவே எடுத்துவிட்டாள்.
தமது குடும்பத்திற்கு ஏற்றவள் இவள்தான் என குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒரேசேர அந்த தீர்மானத்துக்கு வந்துவிட்டால் சாதகம் பார்க்க வேண்டிய தேவையே இருக்காது.
ஜேர்மனி முழுக்கத் திரட்டினாலும் நூறு குடும்பத்துக்குள்தான் வேற்றுக் கிரக மனிதர்கள் இருப்பார்கள். இவர்கள் அனைவருமே குடும்பமாக வாழ்கிறார்கள்.
இவர்கள் ஜேர்மனியில் புலம்பெயர்ந்த அகதிகளாக தாங்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள்,,இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என அகதிக்கான விண்ணப்பங்கள் கொடுத்து பின்னர் இவர்கள் ஜேர்மனியில் வாழ்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுப் பின்னர் ஜேர்மன் குடியுரிமையைப் பெற்று வாழ்பவர்கள்.
இவர்கள் யார் என்பது இவர்களைத் தவிர வேறு எவருக்குமே தெரியாது.இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையில் இருக்கிறார்கள்:.இவர்கள் பூமி மனிதர்களைவிட புத்திசாலிகளாகவும் அறிவுஜீவிகளாகவும் இருப்பதால் வெகுவேகமாக ஜேர்மன் மொழியைக் கற்று ஜேர்மனியக் குடிமகனுக்குச் சமனான சொல் அர்த்தம்,உச்சரிப்புத் தெளிவு போன்றவற்றைக் கொண்டிருப்பதாலும் தாம் எந்த வேலைக்குப் போக விரும்புகிறோமோ அதுபற்றி மிகப்பரந்த அறிதல் ஜேர்மனியருக்கு இருப்பதைவிட மிகக் கூடுதலாக இருப்பதால் பலதரப்பட்ட உயர் பதவிகளில் இன்னும் குறிப்பாக பல்கலைக்கழக பேராசிரியர்களாகவே இருப்பவர்களும் உண்டு.
ஆனால் இவர்கள் ஏன் பூமிக்கு வந்து வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் அனைவருமே உளவாளிகள்தான்.பூமியில் மனிதர்களின் வாழ்வு பற்றியும்,தொழில்நுட்பங்கள் பற்றியும் அறிவதே இவர்களின் நோக்கம்.

ஆனால் பூமியை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்கள் எவருக்குமே இல்லை.தமது கிரகத்து மனிதர்களும் பூமி மனிதர்களும் திருமண பந்தத்தில் ஈடுபட வேண்டும் என்பதுதான் இவர்களின் விருப்பம்.பூமிக்கும் தமது கிருகத்துக்கமிடையில் இருக்கும் இலட்சக்கணக்கான கிலோ மீற்றர் தூரமும் தொடர்புகளை ஏற்படுத்த சிரமத்தைக் கொடுத்து வருவதை பூமியில் உள்ள வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்தவர்கள் அறிவார்கள்.
பூமி மனிதர்கள் அறிந்து வைச்சிருக்கும் ஒன்பது கோள்கள் தவிர்ந்து பூமி மனüதர்:களால் அறியப்படாத கோளிலிருந்து வந்தவர்களில் ஒரு குடும்பந்தான் மகேந்திரராஜா சசிகலா குடும்பமாகும்.
மகேந்திரராஜா போகும் நகர நிர்வாகத்தின் போக்குவரத்துச் சபையினால் நடத்தப்படும் ராம் வண்டியின் சாரதியாக இருக்கிறார்.
அவர் போகும் நகர போக்குவரத்துச் சபையின் நிர்வாக முறைமையினையும்,வேலை செய்பவர்களின் திறமை அணுகுமுறை,பயணிகளின் மனநிலைபோன்றவற்றை அவதானித்து அதனை தனது தாய்கிரகத்துக்கு அறிவித்து வருபவர்.
சசிகலா வேற்றுக்கிரகத்து பெண் என்பதால் அவளால் எதையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் இருப்பதால் மதுசாவை சரவணன் தனது வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வரும்போதே தனது மகனுக்கு மனைவியாகப் போகிறவள்தான் வீட்:டுக்கு வருகிறாள் என அறிவு சொல்லத் தொடங்கியதை அவள் உணர்ந்துவிட்டால்.
பூமி மனிதர்களிடமும் இப்படிச் உணர்தல் இருப்பதுண்டு.சில பெண்கள் தமக்குத் தெரிந்தவர்களை திடீரென்று நினைச்சு இன்றைக்கு எங்கடை வீட்டுக்கு வந்தாலும் வருவார்கள் என எண்ணம் தொடரும் போது,அந்தப் பெண் யாரை நினைச்சாளோ அவர்களிடமிரந்து நாங்கள் உங்கடை வீட்டுக்கு வாறம் என்று சொல்ல,குடும்பத் தலைவியும் இப்பத்தான் உங்களை நினைச்சு வருவியளோ தெரியாது என்று மனம் அலைபாய்ஞ்சுது என்று சொல்வாள்.
ஆனால் அதையும்விட மிகுந்த உணர்சக்தி கொண்டவர்களாகவே சசிகலா கிரகத்து மனிதர்கள் இருந்தார்கள்.
மதுசாவின் தாய்தகப்பனைக் கெஞ்சியாவது தனது மகனுக்கு அவளை மனைவியாக்கிவிட வேண்டுமென்று சசிகலா உறுதியான தீர்மானமே எடுத்துவிட்டாள்.அதே வேளை தாங்கள் மதுசாவின் தாய்தகப்பனைக் கெஞ்ச வேண்டிய தேவை எற்படாது என சசிகலா நம்பினாள்.
சசிகலாவின் தாய்க்கிரகத்திலும் பூமி மனிதர்கள் போல காதல் கல்யாணமும் பேசிக் கல்யாணம் செய்வது நடைமுறையில் இருந்தாலும்,அங்கு சாதகம் பார்க்கும் முறை இல்லை.
அந்தக் கிரகம் பூமியைவிட முன்னேறிய கிரகமென்பதால்,திருமணம் செய்யப் போகும் ஆண் பெண் இருவரின் உடலில் ஒரு கருவியைப் பொருத்தி, அவர்களின் உடல் எத்தகையது என்பதை கணித முறையில் அந்தக் கருவி பதில் கொடுத்தவிடும்.
ஆண் பெண் என அவர்களின் வேதியல் அளவுகளே உடலின் நிலையைத் தீர்மானிப்பதால்,ஆண் பெண் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என்பதை வேதியல் பரிசோதனையே அந்த கிரகத்தில் நடைமுறையில் உண்டு.

அதனால்தான் சசிகலா மதுசாவின் தோளில் ஆதரவாகக் கைவைப்பது போல வைத்தாலும் தனது உடலில் அவளின் உடலில் உள்ள வேதியல் கனிமங்களின் அளவு என்ன அதிர்வைக் கொடுக்கிறது என்பதையும் அளக்கத்தான் என்பதால் மதுசாவின் உடல் தனது மகனுக்கு மிகப் பொருத்தமானது என்பதை உணர்ந்து அவளின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது.
அப்பொழுது சசிகலாவின் கணவர் மகேந்திரராஜா முன்னால்வர அவர்களின் பின்னால் தர்மசிங்கமும்,பூரணேஸ்வரியம் வந்து கொண்டிருந்தனர்.
(தொடரும்…)
![]()