கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டம்; சுமந்திரன் தெரிவிப்பு

கிவுல் ஓயா திட்டத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வன்மையாக எதிர்த்து பாரிய போராட்டத்தை நடத்தும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை 20ஆம் திகதி அமைச்சரவை மாகாவலி கிபுல் ஓயா திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இத் திட்டம் எப்படியாக இனப்பரம்பலை மாற்றி அமைக்கும் என்றும் தமிழ் மக்களின் உரிமைகளை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதையும் எமது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கம் பாராளுமன்றத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.
இந்த திட்ட அமுலாக்கலை தடுக்கும் வகையில் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை நாம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டங்களில் எம்மோடு இணைந்து கொள்ளுமாறு மற்றைய கட்சிகளையும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்தடுத்த நாட்களில் இது சம்பந்தமான கலந்துரையாடல்கள் வவுனியாவிலும் நாம் நடாத்த உள்ளோம். இவற்றிலும் கலந்து கொண்டு உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து இப் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்குமாறு சகலரையும் அன்பாக கேட்டுக்கொள்கிறோம் – என்றுள்ளது.
![]()