சுவிஸ் பாராளுமன்றத்தில் இலங்கைத் தமிழர்; அகதியாக சென்றவருக்கு உயர் பதவி

சுவிட்ஸர்லாந்து செங்காளன் பாராளுமன்றத்தின் முதல்வராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
ஜெயகுமார் துரைராஜா 18 வயதில், சுவிட்சர்லாந்திற்கு அகதியாக சென்றுள்ளார்.
இன்று, செங்காளன் நகரின் உயர்ந்த அரசியல் பதவியான நகரமன்றத் தலைவர் (Stadtparlament-Präsident) பதவிக்கு, பசுமை கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
கோண்டாவிலைச் சேர்ந்த துரைராஜா ஆரம்பக் கல்வியை கோண்டாவில் இராமகிருஷ்ணமிஷனிலும், உயர் கல்வியை உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் பயின்றுள்ளார்.
செங்காளன் நகர மக்களில் சுமார் 30% பேர் சுவிஸ் குடியுரிமை இல்லாதவர்கள். அவர்களுக்காக அவர் குரல் கொடுத்து வந்துள்ளார்.
.“என் முன்னோடி ஜாக்லின் காசர்-பெக், கிரீன் கட்சியிலிருந்து வந்தவர். அவரின் பாதையில் நடக்க நான் தயாராக இருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார் துரைராஜா 2011ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்து குடியுரிமை பெற்றுள்ளார்.
ஒருகாலத்தில் ஆவணமில்லாத அகதியாக செங்காளன் சுவிஸுக்குச் சென்ற துரைராஜா பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன் கட்சி சார்பில் நகரமன்றத்தில் அங்கம் வகித்து வருகிறார்.
பாராளுமன்ற அவையில் ஏனைய கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவருடம் இணைந்து பயணிக்கும் நண்பர்கள் கலந்து இந்நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.
![]()