முச்சந்தி

தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்!

பறிபோகும் தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்துசெயற்படுவது அவசியம் என வாகரை பிரதேசத்தில் பொதுமக்களினால் வலியுறுத்தப்பட்டது.

உயிர்மை நேய விவசாய பொங்கல் விழா மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புச்சாக்கேணி 4ம் கட்டை பகுதியில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் மாகாண தலைவர் கணபதிப்பிள்ளை இராசலிங்கம் தலைமையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாகரை பிரதேச சபை தவிசாளர் தெய்வேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் திட்ட வரைபு ஒன்றியத்தின் உத்தியோகத்தர் ரேணுக, பிரதேச சபை உறுப்பினர் சுவேந்திரன், திட்ட வரைபு ஒன்றியத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் அரவிந்தன், ஊவா மாகாண திட்ட வரைபு ஒன்றியத்தின் இணைப்பாளர், கிழக்கு திட்ட வரைபு ஒன்றியத்தின் உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று வரவேற்பு நடனம் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் தொடர்பான சிறப்பு உரைகள் இடம்பெற்று அதிதிகள் உரையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முக்கிய அம்சமாக இயற்கு விவசாயத்தினை முன்னிறுத்தும் முகமாக விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு அலங்கரிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாகரை பிரதேசத்தில் கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டது.வனஇலாகா,தொல்பொருள் திணைக்களம் என பல்வேறு பகுதிகளினாலும் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டன.
அந்தவேளைகளில் அனைவரும் ஒருங்கிணைந்து முன்னெடுத்த செயற்பாடுகள் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கமுடிந்தது.இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளை நாங்கள் முன்னோக்கும் சூழ்நிலைகள் காணப்படுகின்றன.

அவற்றினை நாங்கள் எதிர்கொள்வதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியமாகும்.அவ்வாறான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமே எமது எதிர்காலத்தில் எமது நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்கமுடியும் என இதன்போது கிழக்கு மாகாணத்திலிருந்து கலந்துகொண்ட பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளினாலும் தெரிவிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *