முச்சந்தி

ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள்- பயணிகள் அவதி

நேற்றைய தினம் ஐனாதிபதியின் யாழ்ப்பாணம் நிகழ்சிக்காக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர்.

பருத்திதுறையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து சேவகளும் காலை 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டிருந்தன.

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்திதுறை சாலை முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதுபோது ஜனாதிபதியின் யாழ்ப்பாண நிகழ்சிக்காக தமது சாலை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக்கவும் இதனால் காலை 10:00 மணியுடன் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டாதாக தெரிவித்தார்.

இதனால் பயணிகள் தமது பயணங்களை மேற்கொள்ள முடியாது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.

இதேவேளை பருத்தித்துறையிலிருந்து வடமராட்சி கிழக்கு கோவில் வரை பிற்பகல் 6:15 மணிக்கு ஈடுபடும் சேவை சில மாதங்களாக பிற்பகல் 6:45 மணிக்கு பின்னரே இடம்பெறுகிறது. இதனால் வடமராட்சி கிழக்கு மக்கள் பிற்பகல் 12:30 மணிக்கு பின்னர் இரவு 6:45 மணிவரை காத்திருக்கின்றனர்.

தை பொங்கல் தினமும் பருத்தி துறை சாலை தனது சேவையையும் முழுமையாக நிறுத்திஇருந்தது.

குறித்த விடயங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்பு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் ஒருங்கிணைப்பு கூட்டங்களில் பலத்தடவைகள் சுட்டிக்காட்டியும் அவரால் எந்தவித நடப்படிக்கையும் எடுக்கப்பப்படவில்லை என்பது குறிப்பிட தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *