முச்சந்தி
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, சிறுவர்களுக்கு காயம்

ஜிந்துப்பிட்டி ‘125 வத்தை’ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (16) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது சிறுவன் ஒருவன் மற்றும் சிறுமி ஒருவரும் காயமடைந்து கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த குழுவினர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மற்றைய இருவரும் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
![]()