முச்சந்தி
அமெரிக்க டெல்டா படை: சோமாலிய தோல்வியும், வெனிசுவேலா வெற்றியும்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

அமெரிக்கா, வெனிசுலாவில் பார்த்த இதே தந்திர வேலையை 1993 ஆம் ஆண்டில் சோமாலியாவிலும் பார்த்தது. அதே டெல்டா படைப் பிரிவைப் (Delta Forces) பயன்படுத்தி, சோமாலிய துணை ஜனாதிபதியைக் கடத்த முயன்றது. வெனிசுலாவில் மதுரோவை நாடு கடத்திய பிறகு ரஷ்யாவின் புட்டினையும் வடகொரியாவின் கிம்மையும், ஈரானின் கொமைனியையும் அமேரிக்கா கைது செய்யக்கூடும் என்று மேற்குலக ஊடகங்கள் சில நாட்களுக்கு முன்னர் பறைசாற்றின.
ஆனாலும் உள்ளக உளவு அமைப்புகளின் ஆதரவுடனேயே வெனிசுவேலாவிற்க்குள் நுழைந்து ஜனாதிபதியை கைது செய்து கொண்டு வர முடிந்தது. மேலும் இதனை செய்த டெல்டா படை தோல்வியின் வரலாறு குறித்து பலருக்கும் தெரியாது.
மொகாடிஷு போர்:
சோமாலியாவில் இருந்து உப அதிபரை கடத்தி வர போட்ட திட்டம் பிழையாகியதால் பாரிய இழப்பை 1993இல் சந்திக்க வேண்டி இருந்தது. சோமாலிய உள்நாட்டு தலைவர் முகமது ஃபரா அயிடீட்டை பிடிக்க டெல்டா படை சோமாலியாவுக்கு 1993இல் சென்றது. இன்று வெனிசுலாவின் அதிபரை அவர்கள் செய்தது போல, ஆனால் அவர்கள் அப்போது தோல்வியடைந்தனர்.

அக்டோபர் 3, 1993 அன்று, அமெரிக்கப் படைகள் சோமாலிய தளபதிகளைக் கைது செய்ய முயன்றபோது, சோமாலியப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் தாக்குதல் மீது நடத்தினர். இரண்டு அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 18 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான சோமாலியர்களும் இறந்தனர்.
ஆனால் சோமாலிய வீரர்கள் அமெரிக்கர்ளுக்கு வாழ்வில் மறக்காத ஒரு பெரும் பாடத்தைக் கற்றுக்கொடுத்தனர். அமெரிக்காவின் டெல்டா சிறப்புப் படையில் 18 உறுப்பினர்ஙளை சுற்றுக் கொன்றனர். சுமார் 70 பேரைக் காயப்படுத்தினர். இரண்டு ஹெலிகாப்டர்களை அழித்தனர்.
மொகாடிஷு போருக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் படிப்படியாக சோமாலியாவை விட்டு வெளியேறத் தொடங்கின. போரில் இறந்த அமெரிக்க வீரர்களின் உடல்களை சோமாலியர்கள் இழுத்துச் சென்ற காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடைசியாக இந்த இராணுவ நடவடிக்கை தோல்வியடைந்தது. மேலும் அமெரிக்க வீரர்களின் உடல்கள் தலைநகர் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் உலகை அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த சம்பவம் அமெரிக்காவிற்கு ஒரு வரலாற்று அவமானமாக மாறியது. அந்த நாளிலிருந்து அமெரிக்கா அரசு சோமாலியா விடயங்களில் இருந்து விலகி இருக்கிறது.
சோமாலிய துணை ஜனாதிபதி கடத்தல் முயற்சி:
1993இல் அமெரிக்கப் படைகளின் இந்தத் தாக்குதல் ஒரு மணி நேரம் மட்டுமே நீடிக்கும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் அது இரவு முழுவதும் மோதல் மற்றும் மீட்பு நடவடிக்கையாக மாறியதுடன், மறுநாள் பகல் நேரம் வரை நீடித்தது. இந்த நடவடிக்கையின் இலக்கு அடையப்படவில்லை. அமெரிக்க அரசுக்கு ஒரு பாரிய தோல்வியாக இருந்தது. மேலும் மொகடிஷுவின் கொடிய போரில் தோல்வியை தழுவியது.
இந்த நடவடிக்கை நடந்து கொண்டிருந்தபோது, சோமாலிய கிளர்ச்சியாளர்கள் RPG-7களைப் பயன்படுத்தி மூன்று அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் ஒரு அமெரிக்க விமானி உயிருடன் பிடிபட்டார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்களில் இருந்து தப்பியவர்களைக் காப்பாற்ற இரவு முழுவதும் சண்டை நீடித்தது. பாகிஸ்தான், மலேசிய மற்றும் அமெரிக்க துருப்புக்களைக் கொண்ட ஒரு பெரிய UNOSOM II கவச வாகனத் தொடரணி முற்றுகையிடப்பட்ட துருப்புக்களை விடுவிப்பதற்காக துணை நின்றது.
வியட்நாம் போரின் பின்னர்:
வியட்நாம் போருக்குப் பிறகு எந்தப் போரும் இவ்வளவு அதிகமான அமெரிக்க துருப்புக்களை இழக்கவில்லை. 18 அமெரிக்க வீரர்கள் இறந்தனர் மற்றும் 73 பேர் காயமடைந்தனர். மலேசியப் படைகளில் ஒருவர் இறந்தனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர், மற்றும் பாகிஸ்தான் படைகள் இரண்டு பேர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்தன. பெரும்பாலான மதிப்பீடுகள் 133 முதல் 700 பேர் வரை இறந்தனர் என்று கூறப்படுகிறது.

இராணுவ நடவடிக்கை தோல்வியடைய காரணங்கள் பல உள்ளன என்று சொல்லப்படுகிறது. அவை தான் இடத்தின் அமைப்பு, தொடர்புடைய நாடு அல்லது பகுதியின் மக்களின் ஆதரவு கிடைக்காதது, கொரில்லா தாக்குதல்கள் போன்றவை ஆகும். அன்று டெல்டா படைக்கு கிடைத்த தகவல்களும் அவற்றை சரியாகப் பயன்படுத்த முடியாததும், எதிரியைக் குறைத்து மதிப்பிட்டதும் காரணமாக தோல்வியை சந்திக்க நேர்ந்தது.
கீழே பறக்கும் ஹெலிகாப்டர்களை இலக்கு வைத்து ஆர்பீஜி-7 களால் துல்லியமாக தாக்கப்பட்டன.எம்.எச்-60 பிளாக் ஹாக் வகை ஹெலிகாப்டர்கள் இரண்டு வீழ்த்தப்பட்டன. இது அமேரிக்காவிற்க்கு பாரிய இழப்பாகும்.
டெல்டா படை எவ்வளவு சிறந்த பயிற்சி பெற்றிருந்தாலும் சோமாலிய ஆயுத குழுக்களின் முன்னர் போரிட முடியாமல் போனது. மேலும் இந்த போரில் 18 பேர் கொல்லப்படும் போது 70 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களின் உடல்களை அந்த சோமாலிய மக்கள் சாலைகளில் இழுத்துச் சென்றனர்.
முழு நாளும் மிகவும் உதவியற்ற நிலையில் வழி தெரியாமல் இருந்த போது ஐ.நா சமாதானப் படைகளின் ஒரு பெரிய படைப்பிரிவு (பாகிஸ்தான் மற்றும் மலேசிய படைவீரர்கள் மற்றும் தாக்குதல் வாகனங்கள்) மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் 10 வது படையினரின் உதவியுடன் தான் இறந்த வீரர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டு வர முடிந்தது.
இந்தப் போருக்கு Battle of Mohadishu என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அமெரிக்க படை வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி போன்றது. இந்த நிகழ்வுக்குப் பிறகு 1994 இல் அமெரிக்க படைகள் சோமாலியாவிலிருந்து விலகுகின்றன.
இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு பின்னர் சிறந்த திரைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டது. திரைப்படத்தின் பெயர் பிளாக் ஹாக் டவுன் 2001 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
சோமாலியா உள்நாட்டுப் போர்:
1993 ஆம் ஆண்டில் சோமாலியா, உள்நாட்டுப் போரினால் சீர்குலைந்து, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டுடன் மனிதாபிமான உதவிகளை வழங்க ‘UNOSOM’ என்றழைக்கப்படும் ஐ.நா. படை நடவடிக்கை (United Nations Operation in Somalia II) நடைபெற்றது. ஆனால் அக்டோபர் மாதத்தில் நடந்த மொகாடிஷு போர் (Black Hawk Down சம்பவம்) அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி, ஐ.நா. மற்றும் அமெரிக்கப் படைகளின் வெளியேற்றத்திற்கு வழிவகுத்தது.

சோமாலியாவில் தொடர்ந்து நிலவிய போரையும், பழங்குடி மோதல்களையும் நிறுத்தவே ஐ.நா. தலையீடு நிகழ்ந்தது. மனிதாபிமான உதவிகளைப் பாதுகாக்கவும், அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும் ஐ.நா. படை சோமாலியாவுக்கு அனுப்பப்பட்டது.
சோமாலியரின் வெற்றி:
அமெரிக்க தலையீடு இராணுவ நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதை சோமாலிய கிளர்ச்சியாளர்கள் வெற்றியாகக் கருதினர். 1995 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அனைத்து ஐ.நா. படைகளும் சோமாலியாவிலிருந்து விலகின. இதற்கு முன்பு 1992 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சோமாலியாவில் ஏற்பட்ட பேரழிவு சூழ்நிலை, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுக்கும் ஐ.நா.வின் பாதுகாப்பு அவசியமாக இருந்தது.
ஐ.நா. அமைதி காக்கும் கொள்கைகள் மற்றும் முறைகள் இத்தகைய சிக்கலான சூழ்நிலைகளில் பலத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை சமாளிக்க முடியாத நிலையில் இருந்தது. டிசம்பர் 3, 1992 அன்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 794, அமெரிக்கா தலைமையிலான ஐ.நா. உறுப்பினர்களின் கூட்டணியை UNITAF ஐ உருவாக்கி, மனிதாபிமான உதவிகளை வழங்குவதைப் பாதுகாக்கவும் அமைதியை மீட்டெடுக்கவும் தலையிட அங்கீகாரம் அளித்தது.
சோமாலியாவில் அவுஸ்திரேலிய படை:
அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படைகள் (ADF) ஐ.நா.வின் ஒரு பகுதியாக மனிதாபிமான உதவிகளைப் பாதுகாக்க ‘ஆபரேஷன் சோலேஸ்’ (Operation Solace) என்ற பெயரில் சோமாலியாவில் பங்கேற்றன.
அவுஸ்திரேலியா ஒரு பட்டாலியன் துணைப் பிரிவுகளை நிறுத்தியது. இதில் கவசப் பணியாளர்கள், தலைமையக ஊழியர்கள், பொறியாளர்கள், தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் நிபுணர்கள், நிர்வாகக் கூறுகள் மற்றும் HMAS வீரர்கள் ஆகியோர் அடங்குவர். அவுஸ்திரேலியப் படைகளை நடவடிக்கைப் பகுதிக்கு நகர்த்துவதற்கும், அங்கிருந்து திரும்பப் பெறுவதற்கும் RAAF வான்படை
பயன்படுத்தப்பட்டது. மேலும் அவுஸ்திரேலியாவிலிருந்து வழக்கமான பல விநியோகப் பணிகளை மேற்கொண்டது. ஆஸி பட்டாலியன் குழு தென்மேற்கு சோமாலியாவில் 17,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பைடோவா மனிதாபிமான நிவாரணப் பிரிவை இயக்கியது.
இந்த பட்டாலியன் குழு மனிதாபிமான நிவாரண முயற்சிகளை வளங்குவதிலும், பாதுகாப்பதிலும் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டது. மேலும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதிலும் செயல்பாட்டது. மேலும் சட்ட, சமூக மற்றும் பொருளாதார அமைப்புகளை மீண்டும் நிறுவுவதிலும் அதன் முயற்சிகளுக்கு பரவலான சர்வதேச பாராட்டைப் பெற்றது. பின்னர் அவுஸ்திரேலியப் படை 1996 இல் திரும்பப் பெறப்பட்டது.
2வது ஐ.நா. நடவடிக்கை -UNOSOMII 1993-1996

அவுஸ்திரேலிய பட்டாலியன் குழு 1996இல் மீண்டும் தேசம் திரும்பியது. அக்காலத்தில் மொகடிஷு விமான நிலையத்தில் ADF படைப் பிரிவு இயக்கக் கட்டுப்பாடு, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு, சில தலைமையக ஊழியர்கள் மற்றும் எதிர்வினைப் பாதுகாப்புக் குழு (SAS) ஆகியவற்றை வழங்கியது.
சோமாலியாவின் மோதல்களால் பாதிக்கப்பட்ட தெற்குப் பகுதிகளில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் அவசர உணவு உதவி, சர்வதேச பேரிடர் உதவி, தொற்றுநோய்களைத் தடுக்க அல்லது தடுக்க தடுப்பூசிகள், சுகாதார மருத்துவமனைகள் மற்றும் மருந்துகளை வழங்குதல், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளை மறுசீரமைப்பு செய்தல், விதை மற்றும் கருவிகளை விநியோகித்தல் மற்றும் பாசன கால்வாய்கள் மற்றும் சாலைகளை மறுசீரமைப்பதற்கான சமூக அடிப்படையிலான உணவு உதவித் திட்டம் போன்ற உதவிகளைத் ஆஸி அரசு தொடர்ந்து வழங்கி வருகின்றது.
2001 இல் சோமாலியாவிற்கான ஒருங்கிணைந்த மூலோபாயத் திட்டம் இலக்கை நிர்ணயித்து, நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றத்தில் மிகவும் பாதுகாப்பான ஒன்றாக மாற்ற முயற்சி செய்யப்பட்டது.
![]()