உலகம்

வெளிநாடொன்றில் பெண்ணை தாக்கி கொள்ளையிட்ட இலங்கை இளைஞன்; பகீர் தகவல்

ஜப்பானின் டோக்கியோவில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு இலங்கையர் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொள்ளையில் ஈடுபட்ட 30 வயதான ஜெயதுங்க ஆராச்சி சிரேஜ் தனுஷ்க என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜப்பானிய பொலிஸார் வெளியிட்ட தகவல்களின் படி, குறித்த இலங்கையர் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி, பெண் ஒருவரிடம் இருந்து கடன் அட்டை உட்பட்ட பொருட்களை கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்து மற்றும் ஏனைய பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் சந்தேகநபரான இலங்கை இளைஞன் தம்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *