முச்சந்தி
சோமாலிலாந் அங்கீகாரம் – பாலஸ்தீன ஆக்கிரமிப்பு!… தந்திரோபாய இஸ்ரேல் வியூகம்… ஐங்கரன் விக்கினேஸ்வரா

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ள இஸ்ரேலின் சோமாலிலாந்து அங்கீகாரத்திற்கு பின்னணியில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தந்திரமான வியூகம் இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக சுதந்திர நாடாக வேண்டி கோரிக்கை விடுத்த சோமாலிலாந்துக்கு இஸ்ரேல் முதன் முதலாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சோமாலிலாந்துக்கு அங்கீகாரம் வழங்கும் வேளையில் இன்னமும் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை இஸ்ரேல் தொடர்கிறது. முதல் உலகப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாலஸ்தீனப் பகுதியின் நிர்வாகத்தை பிரிட்டனிடம் நேச நாடுகள் அளித்தன. போருக்குப் பின் உலகம் முழுவதிலிருந்தும் யூதர்களை பிரிட்டன் பாலஸ்தீனப் பகுதிகளில் குடியமர்த்தியது. யூதர்கள் தங்களுக்கென்று பலமிக்க இராணுவம் அமைத்து பாலஸ்தீனர மண்ணை ஆக்கிரமித்தனர். பிரிட்டன் அதைக் கண்டு கொள்ளவில்லை.
1948 மே 14 அன்று பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறியவுடன், பலமிக்க ராணுவத்தை கொண்டிருந்த யூதர்கள், அமெரிக்க உதவியுடன், பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றினர். அதன் பின்னர் மிகப் பெரிய அளவில் இனஒழிப்பு நடவடிக்கைகள் இன்னமும் பாலஸ்தீனர்க்கு நடத்தப்பட்டு வருகிறது.இஸ்ரேலின் முதல் அங்கீகாரம்
ஆபிரிக்க கண்டத்தில் உள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று சோமாலியா. இந்த நாட்டின் ஒரு பகுதியில் இந்திய பெருங்கடல் உள்ளது. இன்னொரு புறம் செங்கடல் உள்ளது. இந்த இரு கடல்களும் கப்பல் போக்குவரத்துக்கு முக்கியமான ஒன்றாகும்.
சோமாலியாவின் ஒரு பகுதியாக இருந்த சோமாலிலாந்து தனி நாடு கோரியது. சோமாலிலாந்து ஏடன் வளைகுடாவில் அமைந்துள்ளது. இதனால் அது முக்கியமான பகுதியாகும்.1991-ல் சோமாலியாவிலிருந்து பிரிந்து தன்னாட்சியுடன் சோமாலிலாந்து செயல்பட்டு வருகிறது. சோமாலிலாந்து மக்கள் தங்களை தனி நாடாக அறிவித்து கொண்டனர்.
சோமாலிலாந்தை இன்னும் எந்த நாடுகளும் அங்கீகரிக்காத நிலையில் இஸ்ரேல் முதல் முறையாக அதனை செய்துள்ளது. இதற்கு சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சர்ச்சைக்குரிய வகையில் முதல் நாடாக அங்கீகரித்த இஸ்ரேல் அரசின் முடிவை பல அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன.
அறுபது இலட்சம் மக்கள் வசித்து வரும் சோமாலிலாந்து என்ற நாட்டை அங்கீகரிப்பதாக 34 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேல் முதல் நாடாக அறிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம்:
1947 ஆம் ஆண்டு ஐநா சபை மாற்றும் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளின் திட்டமிட்ட
சதியின் மூலம் பாலஸ்தீனம் துண்டாடப்பட்டு யூதர்களிடம் கொடுக்கப்பட்டது. 1967 ஆம் ஆண்டு திட்டமிட்ட பெரும் தாக்குதல் மூலம் பாலஸ்தீனத்தின் பெரும்பான்மை இடங்களை யூதர்கள் ஆக்கிரமித்தனர். தற்போது
சதியின் மூலம் பாலஸ்தீனம் துண்டாடப்பட்டு யூதர்களிடம் கொடுக்கப்பட்டது. 1967 ஆம் ஆண்டு திட்டமிட்ட பெரும் தாக்குதல் மூலம் பாலஸ்தீனத்தின் பெரும்பான்மை இடங்களை யூதர்கள் ஆக்கிரமித்தனர். தற்போதுபெரும்பான்மையான 90% அதிகமான பகுதிகளை யூதர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த பாலஸ்தீனப் பிரச்சினையை நம் காலத்தின் மாபெரும் தார்மீகப் பிரச்சினை என்றார் நெல்சன் மண்டேலா. பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை, அவர்களின் துயரத்தை இதைவிடச் சுருக்கமாக அதே நேரத்தில் மனத்தைத் தைக்கும் விதமாக ஒருவர் கூற முடியாது.
இரண்டாம் உலகப்போருக்கு பின் இரண்டு சம்பவங்கள் உலகை உலுக்கிக் கொண்டிருந்தது.இதில் ஒன்றான தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சி நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்னர் 1994இல் முடிவுக்கு வந்தது. ஆனால் 1940களில் தொடங்கிய பாலஸ்தீன மக்களின் துயரம் இன்றளவும் தொடர்கிறது. பலஸ்தீன சுதந்திர போராட்டமும் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது என நெல்சன் மண்டேலாவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்று ரீதியில் பாலஸ்தீனத்தை பார்த்தால், முதல் உலகப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாலஸ்தீனப் பகுதியின் நிர்வாகத்தை பிரிட்டனிடம் நேச நாடுகள் அளித்தன. போருக்குப் பின் உலகம் முழுவதிலிருந்தும் யூதர்களை பிரிட்டன் பாலஸ்தீனப் பகுதிகளில் குடியமர்த்தியது. யூதர்கள் தங்களுக்கென்று பலமிக்க இராணுவம் அமைத்து பாலஸ்தீனர்களை தாக்கி கைப்பற்றி உள்ளனர்.
புதிய வியூகத்தில் இஸ்ரேல்:
சோமாலிலாந்து அங்கீகாரத்தால் ஆப்பிரிக்காவின் கொம்பு பிராந்தியம் மற்றும் செங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைக் குலைக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சோமாலிலாந்து செங்கடல்-ஏடன் வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. சர்வதேச அளவில் கப்பல் போக்குவரத்துக்கு இந்த வழித்தடம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக ஏமனின் ஹவுதிகள் இஸ்ரேல் கப்பல்களை செங்கடலில் தான் தாக்குகின்றனர். இப்படியான சூழலில் சோமாலிலாந்தை கைக்குள் வைத்து கொண்டால் அங்கிருந்து ராணுவ தாக்குதல்களை எளிதாக நடத்தலாம். அதோடு ஏமனின் ஹவுதிகளுக்கும் உரிய பதிலடி கொடுக்க முடியும் என்று நெதன்யாகு கணக்கு போட்டுள்ளார்.சோமாலிலாந்துடன் பிரிட்டன், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், டென்மார்க், தைவான் உள்ளிட்ட நாடுகள் தூதரகம் ரீதியிலான உறவை பேணி வந்தாலும் கூட தனி நாடாக அங்கீகரிக்கவில்லை.
சோமாலிலாந் சுதந்திர நாட்டின் கல்வி, சுகாதாரம், விவசாய துறை மேம்பாட்டுக்கு உதவுவதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் சோமாலிலாந்து அதிபர் அப்திர் ரஹ்மான் முகமது அப்துல்லாஹியிடம் பேசியிருந்தார்.
இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியான் ஸார் மற்றும் சோமாலிலாந்து அதிபர் அப்துர் ரஹ்மான் முகமது அப்துல்லாஹி ஆகியோர் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த நடவடிக்கை ஆபிரகாம் ஒப்பந்தத்துக்கு இணங்குவதாகவும், இதுபற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் இதை விவாதிப்பதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஆபிரகாம் ஒப்பந்தம் என்பது யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என மூன்று மதங்களிலும் முக்கிய தீர்க்கதரிசியாக கருதப்படும் ஆபிரகாம் பெயரில் உள்ள உடன்படுக்கையாகும்.
இது கடந்த 2020ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்யஇஸ்ரேல், ஐக்கிய அமீரகம், பஹ்ரைன் இடையேயான அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் வழியாக இஸ்ரேல் இஸ்லாமிய நாடுகளுடன் உறவை சுமூகமாக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தான் ஆபிரகாம் ஒப்பந்தம் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் அங்கீகார பின்னணி:
சோமாலிலாந்து குடியரசை இஸ்ரேல் அங்கீகரித்த செய்தியை பல அரபு நாடுகளும் தங்களது
எதிர்ப்பை தெரிவித்து உள்ளன. இஸ்ரேல் ஏன் இதைச் செய்கிறது என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
எதிர்ப்பை தெரிவித்து உள்ளன. இஸ்ரேல் ஏன் இதைச் செய்கிறது என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.சோமாலியா இரண்டு மாநிலங்களின் ஒன்றியத்தால் ஆனது. ஒன்று முன்னர் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த சோமாலிலாந்து மாநிலம். இது வடக்கில் உள்ளது மற்றும் முதன்மையாக இசாக் குலத்தினர் வசிக்கின்றனர். இரண்டாவது முன்னர் இத்தாலிய கட்டுப்பாட்டில் இருந்த சோமாலிலாந்து பிரதேசம் ஆகும். இசாக் இனச் சமூகத்தினர் வடக்கில் பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால் ஒன்றியத்திற்குப் பிறகு, அவர்கள் சிறுபான்மையினராக மாறினர். தெற்கில் உள்ள மொகடிஷுவில் உள்ள மத்திய அரசாங்கம் அவர்களை ஒடுக்கியதாகவும், 1981 இல், ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்ல சுதந்திரப் போரை அறிவித்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
சோமாலிலாந்து குடியரசு நிலையானது, செயல்படும் ஜனநாயகம் மற்றும் ஒப்பீட்டளவில் வளமானது என்பது உண்மைதான். இதற்கு நேர்மாறாக சோமாலியா பெரும்பாலும் தோல்வியுற்ற நாடாக உள்ளது. இஸ்லாமிய ஜிஹாதிஸ்ட் குழுவான அல் ஷபாபின் கட்டுப்பாட்டில் பெரிய பகுதிகள் உள்ளன.
இந்த நிலையில் இந்த இரு நாடுகளின் தற்போதைய நிலைமையில் இருந்து பல வேறுபாடான விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். இரண்டு தேசிய இனங்கள் ஒன்றிணைந்த பிறகு பிரிவது எளிதானது அல்ல. பெரும்பாலான நாடுகள் இதை அடைய அழிவுகரமான போரை நடத்துகின்றன. ஆனால் வரலாற்றில் சிங்கப்பூரும் மலேசியாவும் இரத்தமின்றி இதை அடைந்தன.
இரண்டாவதாக, சட்டப்பூர்வ அங்கீகாரம் செயல்படும் அரசுக்கு வழிவகுக்காது. இதற்கு நேர்மாறாக, ஒரு அரசு அங்கீகரிக்கப்படாததால், அது செயல்பட முடியாது என்று அர்த்தமல்ல. இதனால்தான் சிங்கப்பூர் பாலஸ்தீனத்திற்கு செயல்படும் அரசாங்கம் இருக்கும்போது மட்டுமே நாங்கள் அதை அங்கீகரிப்போம் என்று கூறியுள்ளது.
இஸ்ரேல் சோமாலிலாந்து குடியரசை அங்கீகரிப்பதில் பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன.சோமாலிலாந்து குடியரசு ஏடன் வளைகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ளது. மறுபுறம் ஏமன் (Yemen) நாடும் உள்ளது. குறிப்பாக, ஹவுத்திகள் யேமனை கட்டுப்படுத்தி வருகிறார்கள். இஸ்ரேலுடன் முரண்படும் ஈரானிய சார்பானவர்களே ஹவுத்திகள் ஆவார்கள். செங்கடல் ஊடாக கப்பல் போக்குவரத்தின் முக்கிய புள்ளியான ஏடன் வளைகுடாவையும் அவர்கள் தடுத்தனர்.
ஆனால் அவர்களுடன் முரண்படும் சோமாலிலாந்தை இஸ்ரேலிய அரசு அங்கீகரித்துள்ளமை, ஹவுத்திகளை ஏமனில் ஒரு வழிக்கு கொண்டுவரவே இந்த அங்கீகார முயற்சி என்று கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் தற்போது அமெரிக்கா விலகியே உள்ளது. சோமாலியாவுடன், அமெரிக்காவுக்கு தற்போது மோதல் போக்கு உள்ளது. அதேவேளையில் இஸ்ரேலுடன் நல்ல நட்பு உள்ளது. மேலும் செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் வர்த்தக கப்பல்களுக்கு ஏமன் ஹவுதிகளால் அச்சுறுத்தல் உள்ளது. இருப்பினும் கூட சோமாலியாவில் இருந்து பிரிந்து செயல்பட்டு வரும் சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்ததை டிரம்ப் ஏற்கவில்லை. சோமாலிலாந்து உட்பட சோமாலியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை தாங்கள் விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
![]()