இந்திய – பாகிஸ்தான் போரை நிறுத்தியது யார்?; அமெரிக்கா – சீனாவுக்கிடையில் கடும் போட்டி

இந்திய – பாகிஸ்தான் போரை தாங்கள் தலையிட்டு முடித்து வைத்ததாக சீனா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா ‘ஒபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. கடந்த மே மாதம் 7ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நீடித்தது. பின்னர் மே 10ஆம் திகதி இரு நாட்டு ராணுவ நடவடிக்கை இயக்குநர்கள் (டிஜிஎம்ஓ) நடத்திய நேரடிப் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ‘எனது எச்சரிக்கையால்தான் 24 மணி நேரத்தில் போர் நின்றது’ என்று தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இந்திய அரசு, டிரம்பின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்ததுடன் இந்த போர் நிறுத்ததிற்கு மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்றும் கூறி வருகிறது.
இந்நிலையில் டிரம்ப் கருத்துக்கு போட்டியாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேசுகையில்;
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிப்பதில் சீனா மத்தியஸ்தம் செய்தது. அரசியல் நிபந்தனைகள் இன்றி பிரச்னையின் ஆணிவேரை அறிந்து செயல்பட்டோம்’ என்று தெரிவித்தார். சீனாவின் இந்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
![]()